அனிச்சம் பூ 1

16.8K 156 36
                                    

பார்த்த விழிகள் விரிந்து திறக்க பிரிந்த இமைகள் பொருந்த மறுக்கஅதிர்ந்த இதயம்தெரிந்தே சறுக்க

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

பார்த்த விழிகள்
விரிந்து திறக்க
பிரிந்த இமைகள்
பொருந்த மறுக்க
அதிர்ந்த இதயம்
தெரிந்தே சறுக்க ...

' சே! யார் இவன் ? எங்கே திரும்பினாலும் இவன் முகம் தெரிகிறது , இதில் சிரிப்பு வேறு , அச்சோ! சரித்தே கொல்கிறானே, கொள்ளை அழகு , இவன் குறுஞ்சிரிப்பில் குழந்தை சிரிப்பும் தோற்று விடும் போல , எனக்கு என்ன ஆச்சு ! இவனைப் பார்த்து நான் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாகிறேன் கடவுளே.. , இந்த தீப்தி வேறு .... இன்டர்வியூ முடித்து இன்னும் வரக்காணோம் , மீண்டும் அவனைப் பார்ப்பதற்குள் இங்கிருந்து கிளம்பிவிடவேண்டும் ' என்று நினைத்தவாறு அந்த ஹோட்டலின் வரவேற்பறையில் தோழிக்காக காத்திருந்தாள் , நம் கதையின் கற்கண்டு காதல் தேவதை ஜீவிகா ...

ஜீவிகா , நான்காண்டு நேரடி MCA கோர்ஸின் , இறுதியாண்டு மாணவி, க்ராஃபிக் ஆர்வத்தால் அனிமேசனும் படித்து வந்தாள். நான்கு வருடக் கல்லூரி வாழ்க்கையில் யார் வலையிலும் விழாமல், ப்ரப்போஸல்சை நட்பாக மாற்றிப் பிறர் மனம் நோகாமல் தனக்கென எல்லைக் கோடிட்டுப் பழகுபவள் ,

ஆம் அவ்வாறு நட்பானவன் தான் நித்தின், ஆரம்பத்தில் உளறிக் கொண்டிருந்தாலும் பின்பு கலஙகமற்ற நட்பில் மூழ்கினான்.

ஜீவிகாவின் நட்பு வட்டம் சிறியது தான், நித்தின், இர்ஃபான், மான்ஷா, ஸ்வேதா .
ஜீவிகாவும் இர்ஃபானும்தான்,
இந்த கூட்டத்தைக் கட்டி மேய்க்கும் கெட்டிக்காரர்கள். நித்தினை மேய்ப்பதற்கே தனித்திறமை வேண்டும்.

ஜீவி அனிமேசன் படிக்கும் அதே இன்ஸ்டியூட்டில் , MBA முடித்த தீப்தியும் ஃபேஷன் டிசைனிங் பிரிவில் படித்தாள் , இருவருக்கும் இடையேயான நட்பு மலர்ந்து இருவருடங்கள் ஆகின்றது , தீப்தி அவளுக்கு வேலைக்கான ஒரு இன்டர்வியூவிற்குத்தான் ஜீவிகாவையும் அழைத்து வந்திருந்தாள் ,

ஜீவிகா அந்த வரவேற்பறையில் உள்ள மீன்தொட்டியில் இருந்த மீன்களை ரசிக்க ஆரம்பித்திருந்தாள் , ஆனாலும் அவள் மனதில் அவள் பார்த்த அவனின் முகம் வந்து வந்து போனது.

ஜீவிகா அந்த வரவேற்பறையில் உள்ள மீன்தொட்டியில் இருந்த மீன்களை ரசிக்க ஆரம்பித்திருந்தாள் , ஆனாலும் அவள் மனதில் அவள் பார்த்த அவனின் முகம் வந்து வந்து போனது

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now