அனிச்சம்பூ 11

3K 113 34
                                    

கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்த வீட்டில் குழந்தைகள் சாக்லேட் பேப்பர்களால் நிறைப்பது போல அந்தக் கல்லூரி வளாகத்தின் துப்புரவாளர்களால் சுத்தம் செய்த பிறகும் மரங்கள் தன் சருகுகளை உதிர்த்துக்கொண்டிருந்த காலை நேரம் , ஜீவிகா அந்த மரத்தடியின் ஸ்டோன் பெஞ்சில் தன் நட்புகளின் வருகைக்காக காத்திருந்தாள் .

அவளின் மனதில் சனி ஞாயிறு என்ற இரண்டே நாட்களின் இடைவெளியில் இனம்புரியாத ஏதோ இனிய உலகத்துக்குச் சென்று திரும்பியது போலிருந்தது , ஏன் இப்படித் தோன்றுகிறது என்றே யோசிக்கையில் எல்லாம் அவன் ( நம்ம ஹீரோ ) செயல் என்பதாகவும், நட்புகளுடன் பகிர்ந்து கொள்ள ஏதோ மகிழ்ச்சியான நிகழ்ச்சி இருப்பதாவும் தோன்றியது , ஆனால் எப்படிச்சொல்வது ?

இவர்களின்
நட்பு எல்லையில்
காதல் என்பது
தடைசெய்யப்பட்ட பகுதி ,

தன் தோழிகள் கூட காதலால்
காயம்படக்கூடாதென்று , முதலில் ஸ்டடீஸ் , கரியர், அப்புறமே காதல் என்று காதல் கட்டுப்பாட்டு அதிகாரியாய் செயல்படுவள் ஆயிற்றே இவள், மீறினால் இவர்களின் கூட்டத்தின் தலைமை இர்ஃபானிடம் சொல்லி ஆவன செய்து ஆப்பு வைத்துவிடுவாள் , இர்ஃபான் வீட்டில் காதல் புயலால் ஏற்பட்ட இழப்பு அவனை , தன் நட்புக்களையும் காதலில் இருந்து காப்பாற்றவே நினைத்தது , இந்தநிலையில்

எப்படிச் சொல்வது ,
யாரிடம் சொல்வது ,
அவனைக் கண்டதையும்
காதல் கொண்டதையும் ,
பகிர்ந்திடாத துன்பம்
மட்டும் பாரம் இல்லை ,
பகிர்ந்திடாத இன்பம்
கூட பாரம் தான் .

அதுவும் ஊர் பேர் தெரியாத ஒருவனைப் பார்த்ததிலிருந்து பைத்தியமாய் இருக்கின்றேன் என்றா? படும் அபத்தமாக அல்லவா இருக்கிறதது ,இப்படி அவள் மனம் நொடியில் நூறு நினைவுகளில் தவித்ததுக்கொண்டிருக்கும் பொழுது தான் ,

" ஜீவீ.... "
தோழியின் அழைப்பில் திரும்பினாள் ,

"ஏய் மானுக்குட்டி (மான்ஷா) ஏன்டி அங்க இருந்து வரும் போதே கத்தீட்டு வர்ற , இர்ஃபா எங்கடி ? "

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now