மாயம்: 12

2.8K 109 60
                                    


அன்று இரவு வரை வர்ஷித் சொன்னதையே யோசித்தவள், இரவிற்கு வீட்டிலேயே இருவருக்கும் சேர்த்து சமைத்து இருந்தாள். அவள் பரிமாறும்போது அவளின் முகம் களையிழந்து  தென்பட்டது வர்ஷித்தின் கண்களுக்கு. இதற்கு ஏற்றவாறு ஆதிகாவும் வர்ஷித்தின் வார்த்தைகளுக்கு உயிர்கொடுத்து  அதையே யோசித்து கொண்டிருந்தாள்.

வர்ஷித், "என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்க?"என கேட்க "இல்லை... ஒண்ணுமில்ல" என கூறினாள். அவனும் மேல ஏதும் கேட்க விரும்பாமல் சாப்பிட்டான்.  அவன் எழுந்து சென்ற பிறகே டைனிங் டேபிளில் அமர்ந்து  உணவு உண்ண முயன்றாள். எவ்வளவு முயற்சித்தும் அவளால் கண்ணீரை தடுக்க முடியவில்லை. எண்ணப்போக்கில் எண்ணிக்கொண்டு,  சாப்பாட்டை கொறித்துவிட்டு சமயலறையில் வேலையெல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்தாள்.

வெளியே வந்தவள் ஹாலில் உட்கார்ந்து போன் நோண்டி கொண்டிருக்கும் கணவனை கண்டு அங்கு போனாள். 'பழைய நியாபகங்கள் வந்திருக்கும் போல, யாருக்கு தான் மறக்க முடியும். அதுக்கூட சின்ன பிள்ளையிலிருந்து அம்மா அப்பா கூட இருந்தவ அதான் இங்க தனியா இருக்கறதுனால சோகமா இருக்கா' என யோசித்தே அவளின் முகவாட்டத்தின் காரணத்தை கேட்காமல் விட்டான், அவனை பற்றியே அவள் நினைப்பது அறியாமல். அவளின் தனிமையை முதலில் போக்கணும் என எண்ணியவன், ஆதிகாவிடம், "இங்க நீ தனியா இருப்பில, நீயும் இன்டெர்வியூக்கு சென்று வேலைக்கு போனால் உனக்கொரு மாறுதல் கிடைக்கும்ல. இத பத்தி யோசி, உனக்கு சம்மதம்னா சொல்லு நான் மேற்கொண்டு ஏற்பாடு பண்றேன்" என கூற ஆதிகா, "நான் யோசிக்கிறேன்" என அவனிடம் சொன்னாலும் அறைக்கு வந்தவள் 'அட லூசு, நீ சொன்னா நான் கேட்காம இருப்பேனா, அதிகாரமா சொல்லாம பட்டும் படாமல் சொல்ற' என அவனை மனதுக்குள் திட்டினாள். அவள் அந்த அறையில் படுத்து, காதில்  கேட்பொறியை(ஹெட் செட்) காதுகளில் அணிந்து  பாடலை கேட்டு கொண்டு படுத்துறங்கினாள். அவள் உறங்குவதை உறுதி படுத்திகொண்டு அறைக்குள் நுழைந்து, அவளின் ஹெட் செட்டை கழட்டி வைத்து விட்டு போர்வையை இழுத்து போர்த்தி விட்டு, அடுத்த அறைக்கு சென்று படுத்து உறங்கினான் வர்ஷித்.

  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது)Where stories live. Discover now