மாயம்: 23

2.9K 108 50
                                    

தன் காதல் தனக்குரியவளிடம் சேர்ந்து விட்டது எனும் நிம்மதியும், இவள் எப்படி டைரியை படித்தாள் எனும் அதிர்ச்சியும் ஒருங்கே இருந்தது வர்ஷித்திற்கு.

இருவரும் வெவ்வேறு எண்ண ஓட்டங்கள் பின்னால் ஓட, வர்ஷித் அலுவலக வேலையில் ஈடுபடும் போது தான் கவனித்தான், தன்னோடு வேலை செய்யும் ஒருவர் சில நாட்களாக வரவில்லையென, இதை அறிந்துகொள்ளும் பொருட்டு, நண்பனிடம் கேட்க,  "அவன் கதையா கேக்காதடா கஷ்டமா இருக்கு" என வேதனை குரலுடன் கூற ஆரம்பித்தான்.

"அவருக்கு லவ் மேரேஜ்டா, ரெண்டு பெரும் நல்லா தான் இருந்தாங்க, ஏதோ கருத்து வேறுபாடு போல. இதுல நான் சொல்றதுதான் கேக்கணும்னு சொல்லி,   அவன் அந்த பொண்ணுகிட்ட டிவோர்ஸ் பேப்பர நீட்டிருக்கான், அவன்  சொல்றத கேக்க வைக்குற நோக்கத்துல தான் டிவோர்ஸ் வரையும் போனான். ஆனால் அந்த பொண்ணு, எனக்குன்னு யாருமே இல்ல, டிவோர்ஸ் கிடைச்சிட்டா,  அநாதை ஆகிருவேன் அதனால தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு செய்து இறந்துட்டாங்கடா. ரொம்ப கஷ்டமா இருக்கு, மனுஷன் இப்போ துடிக்கிறாரு,  அத டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணும்போதே யோசிச்சுருக்கணும். ஒரு பொருள் பக்கத்துல இருந்தா அதோட அருமை புரியாதுடா , அது இல்லனா தான் புரியும்" என வருத்தம் கொண்டு அவன் முடித்தான். வர்ஷித் அந்த கதையை கேட்டு உருக்குலைந்து போய் விட்டான்.

அவனது நண்பன் சொல்லிய கடைசி வரிகள் அவனுக்காகவே சொல்லியது போல இருந்தது. அவனாலும்,  டிவோர்ஸ் கிடைத்துவிட்டால் ஆதிகாவை விட்டு பிரிய முடியாது என தோன்றியது. 'அவளுக்கு பிறகு எனது வாழ்க்கையில் என்ன இருக்கப்போகுது?'  என யோசிக்க, அவனுக்கு சொல்ல அளவில்லாத துயரம் தான் மிஞ்சும். அப்போதுதான் அவனது முட்டாள் தனத்தை உணர்ந்தான்.
 
'கையில் கிடைச்சும் விட பாத்துருக்கேனே' என அவனே அவனை சாடிக்கொண்டான். 'டிவோர்ஸ் வேணும்னு துடிக்கிறேன் அவ இல்லாம நான் இருப்பேனா, அவ சந்தோசம்னு சொல்லி சொல்லி நம்ம சந்தோசத்தை மறச்சிட்டு செய்றேனே' என முதல் முறை அவன் அவனுக்காக யோசித்தான். ஆனால், 'அவளே இது வேணாம்னு தானே கொடி புடிச்சா, அவளுக்குள்ள என் மேல  இருக்குறது அக்கறை தாண்டி உண்மையான லவ் போல நாம தான் தெரியாமல் அதை அழித்து விட துணிந்து விட்டோமே. நேத்து கூட டிவோர்ஸ்ல பேப்பர்ல சைன் போடும்போது அழுதாளே, அந்த கண்ணீர்ல அவ்ளோ வலி தெரிஞ்சதே, ரொம்ப தப்பு பண்ணிட்டோம். அவளுக்கும் பேச ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கனும். அவ சந்தோசத்திற்குத்தான் எல்லாம் என சொல்லி இத்தனை நாளா அவள கூறு போட்டு கொன்னுருக்கோமே, நான் டிவோர்ஸ்னு சொல்லும்போது எவ்ளோ துடிச்சிருப்பா. உனக்கு பெரிய தியாகினு நெனப்புடா. அதான் நீ தியாகம் பன்றேன்னு அவளை பண்ணவச்சிட்ட, இதுல பரிதாப காதல் வேறன்னு சொல்லி அவளை காயப்படுத்தியாச்சி,  சரியான அவசர புத்திக்காரன்டா நீ' என தான் தவறுகளை உணர்ந்து தன்னையே திட்டிக்கொண்டு அவளிடம் இப்பவே  மன்னிப்பு கேட்க வேணும் என நினைத்தவன்,  'இல்லை சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்' என இரவில் சீக்கிரமாக வீட்டிற்கு சென்று அவளிடம் மனசு விட்டு பேசணும் என உறுதி கொண்டு காதல் கைகூடும் எனும் ஆனந்தத்தில் இருந்தான் வர்ஷித். அவனது காதல் என்று வரும்போது குற்ற உணர்வை எல்லாம் பின்னுக்கு தொலைவில் சென்றுவிட்டது. அவனது மனதில் ஆதிகா ஆதிகா ஆதிகா மட்டுமே ஆக்கிரமித்திருந்தாள்.

  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது)Where stories live. Discover now