சூரியன் கிழக்கு வானில்
உதிக்க !
பறவைகள் கீச்சிட்டு
பறந்து செல்லும் அழகு !
காற்றினால் அசையும்
மரங்களின் இரைச்சல் !
விலங்குகளின் வித்தியாசமான
ஓசை !
சல சல என நீரோடும்
ஓசை !
காற்றோடு காற்றாக மறைந்து
செல்லும் மௌன ராகம் !
பல கதை சொல்லும் பயங்கர
மௌனம் !
கொஞ்சமேனும் அச்சமடைய வைக்கும் ஓசைகள் !
என்பன ,
எனக்கு மெல்லிசையாக
காதுகளில் ஒழிக்க !
அவ் வன ராஜனுக்கு இவை
அனைத்தும் அழகோ அழகு !
YOU ARE READING
நெஞ்சத்தின் நினைவலைகள்
Poetryஇது என்னோட முதல் கவிதை தொகுப்பு எப்பிடி இருக்குனு வாசித்து பார்த்து வாசகர்கள் நீங்கள் தான் சொல்லணும் . குறிப்பு : இது என்னோட சொந்த முயற்சி