மகாவும், யாழினியும் சாந்திவனம் செல்ல தயார். அழகு பதுமையாய் ஜொலித்த, யாழினியை பார்த்த மாத்திரத்தில், சமையலறைக்கு ஓடிச் சென்று, பிடி அளவு உப்பை அள்ளி வந்து, யாழினிக்கு சுற்றிப் போட்டார், மஹா.
"இது கண்திருஷ்டிகாககத் தானே" யாழினி உதடு கடித்து சிரித்தாள்.
மஹாவும் சிரித்தபடி தலையசைத்தாள்.
"போகலாமா?" என்று கேட்ட மஹாவின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் யாழினி.
"ஏன்னே தெரியலம்மா, எனக்கு நெர்வஸா இருக்கு."
தன்னுடைய தயக்கத்தை வெளியிட்டாள் யாழினி.
"நான் தான் உன் கூட இருக்கேனே. உனக்கு அவங்களை நிச்சயம் பிடிக்கும் பாரேன்."
மஹா தைரியம் அளித்து அழைத்துச் சென்றார்.
*சாந்தி நிலையம்*
நேரம் நெருங்க நெருங்க சாந்தி நிலையம் சூடுடேறிக் கொண்டிருந்தது. யாருக்கும் உட்கார பிடிக்காமல், இங்கும் அங்குமாக திரிந்து கொண்டிருந்தார்கள்.
அபி மட்டும், வரவேற்பறையில் இல்லை. எல்லோரையும் விட அவனே அதிக பதட்டத்துடன் இருந்தான். ஆனால், இது அவனுக்கு நல்லதல்ல. அவன், கையும் களவுமாக பிடிபட வாய்ப்புள்ளது. அவன் தன்னை அசுவாசப்படுத்திக் கொள்ளத் தான் வேண்டும்.
அழைப்பு மணியின் ஓசை, அவன் இதய துடிப்பை பன்மடங்காக்கியது. அவன் இப்போது கீழேதளம் சென்றாக வேண்டும். ஒரு நொடியையும் அவனால் வீணாக்க முடியாது. நீண்ட பெருமூச்சை வெளியிட்டு, அவன் கீழ்தளம் நோக்கி விரைந்தான்.
அஞ்சலி ஓடோடி சென்று கதவை திறந்தாள். மனதிற்கினிய காட்சி அவள் கண் முன் விரிந்தது. நேர்த்தியான சுடிதாரில், மிக அழகாய் மஹாவுடன் நின்று கொண்டிருந்தாள் யாழினி. அடுத்த நொடி அஞ்சலி, கட்டுப்படுத்த முடியாத கண்ணீருடன், யாழினியை ஆரத்தழுவிக் கொண்டாள். யாழினி அவளின் அணைப்பில் சற்று தடுமாறித்தான் போனாள். அவள் இது போன்ற ஒரு வெதுவெதுப்பான வரவேற்பை எதிர்பார்த்திருக்கவில்லை. அஞ்சலி தன்னை விடுவித்துக் கொண்டாள்.
YOU ARE READING
யாதுமாகி நின்றவள் (முடிந்தது)
RomanceThis is the translated version of my story YOU ARE MY EVERYTHING with a few changes, according to Tamil background. I'm doing this for my friends and family.