Part 17

1.8K 81 2
                                    

பாகம் 17

"நம்ம ரெண்டு பேரும் காதலிச்சிருந்திருக்கலாம்" என்று சொன்ன யாழினியை, உறைந்த பார்வையுடன், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பார்த்தான் அபி.

அவன் தொண்டைக்குள்ளிருந்து எகிரி குதிக்க, துடித்துக் கொண்டிருந்த வார்த்தைகளை மென்று முழுங்கினான் அவன்.

"ஏன்? " என்று கேள்வி எழுப்பினான்.

"நீங்க என் மேல வச்சிருந்த அக்கறையை பத்தி கேட்கும்போது, அப்படி தோணுது எனக்கு"

"அப்படியே இருந்திருந்தால் கூட என்ன பிரயோஜனம்? நீ தான் எல்லாத்தையும் மறந்துட்டியே? "

"ஆனா நீங்க மறக்கலல? நான் மறந்திருந்தா என்ன? நீங்க எனக்காக எல்லாத்தையும் எதிர்த்திருக்க மாட்டீங்களா? "

அவள் சொன்னவை அனைத்தும் அட்சரம் பிசகாத உண்மை வார்த்தைகள். அதற்காகத்தானே அவனும் இப்போது போராடிக் கொண்டிருக்கிறான். ஒரு மெல்லிய புன்னகை அவன் முகத்தில் இழையோடியது.

"ஏன், உனக்கு கிரீஷை பிடிக்கலையா? "

"எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு. என்னை சந்தோஷமா வச்சிக்கறான். என்ன சிரிக்க வைக்கிறான். அதுக்கு மேல வேற எதுவுமே எனக்கு அவன்கிட்ட தோணல".

"அப்போ, நீ அதை அவன்கிட்ட நேரடியா சொல்லிடலாமே? அவன் இல்லாத ஆசைய, மனசுல வளக்க மாட்டான் இல்லையா? "

"சரி. ஆனா, அதுக்கப்புறம் நான் என்ன பண்றது? "

"நீ அவன பத்தி உண்மையா என நினைக்கிறேன் அவனுக்கு தெரியணும் இல்லையா? "

" நான் அவனுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். நல்லவனா இருக்கான். என்னை உண்மையா நேசிக்கிறான்".

"உனக்கு தான் அவன் மேல எந்த எண்ணமும் இல்லன்னு சொல்றியே, அப்புறம் அவனுக்கு சான்ஸ் கொடுக்க என்ன அவசியம் இருக்கு? "
பல்லை கடித்துக் கொண்டு அடக்க மாட்டாத தன் கோபத்தை வெளிப்படுத்தினான் அபி.

"எப்படி இருந்தாலும், நான் யாரையாவது கல்யாணம் பண்ணி தானே ஆகணும்? அது கிரீஷா இருந்தா நல்லது தானே? தெரியாத தேவதையை விட தெரிஞ்ச பேய் மேல் இல்லையா?"

யாதுமாகி நின்றவள் (முடிந்தது)Where stories live. Discover now