Part 27

2.1K 78 2
                                    

பாகம் 27

எல்லோரும் ஆவலுடன் யாழினியை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவளுக்கு எப்படி அனைத்தும் தெரிந்தது? ஏதோ அனைத்தையும் நேரில் பார்த்தது போல் அல்லவா பேசுகிறாள்.

"யாழினி இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? உனக்கு ஞாபகம் திரும்ப வந்திருச்சா?" என கேட்டார் மஹா.

"இல்லம்மா, என்னுடைய நினைவு திரும்பி வரலை"

"அப்புறம் உனக்கு எப்படி எல்லாம் தெரிஞ்சது?"

"நான் தான் சொன்னேன்"
என்று கூறிய கிரீஷின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியது.

"நீயா?" என்ற ஏகோபித்த குரல் ஒலித்தது.

அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த ஆதிகேசவனை பார்த்து,

"அபியோட குடும்பம் தான் உங்களுக்கு சத்தியம் பண்ணி கொடுத்திருந்தாங்க. நான் இல்லை".என்றான்.

"நான் யாழினியிடம் எல்லாத்தையும் முதல்நாளே சொல்லிட்டேன். தேவையில்லாத பழிவாங்கும் படலத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அனாவசியமா அடுத்தவங்களுடைய வாழ்க்கைக் கெடுக்கிற அளவுக்கு நான் மோசமானவனுமில்ல. என்னைக்கோ வாங்கின அடிக்கு பழிதீர்த்துக்க அல்பதனமா நடந்துக்கிறவனும் நான் இல்ல." என்றான் கிரிஷ் அபியை நோக்கி நடந்து கொண்டே.

"யாழினி என்னைஅவளோட அண்ணனா ஏத்துகிட்டா. இப்போ எங்களுடைய ரிலேஷன்ஷிப்பை ஏத்துக்குறதுல உனக்கு எந்த பிரச்சனையும் இல்லைனு நினைக்கிறேன்." என்றவனை இமை கொட்டாமல் பார்த்து நின்றான் அபி.

"சில சமயங்களில், செகண்ட் ஹீரோவும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கிறது உண்டு பாஸ்" என்றான்.

"ஆனா, ஒரு வில்லன் செகண்ட் ஹீரோவா மாறுவான்னு யார் எதிர்பார்த்தா?" என்றான் அமர்.

"நாங்க உன்னுடைய மொத்த சிஸ்டதயும் ஹேக் பண்ணி இருந்தோமே, அப்படியிருக்கும் போது, எங்களுக்கு இத பத்தி ஒண்ணுமே தெரியாம எப்படி போச்சு?" என்றான் ஆச்சரியத்துடன் அமர்.

யாதுமாகி நின்றவள் (முடிந்தது)Where stories live. Discover now