பாகம் 26
அதிர்ச்சியில் வாயடைத்து போனார் ஆதிகேசவன். அவர் இப்படி ஒரு எதிர்வினையை மகாவிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. அவருடைய பலவீனத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மனக்கோட்டை கட்டியிருந்தார் அவர். ஆனால், மகா ஆடிய ருத்ர தாண்டவம் அவரை பிரமிக்க வைத்துவிட்டது.
அதேநேரம் ஈஸ்வரன் அவர் குடும்பத்துடன் ஆதிகேசவன் இல்லம் வந்து சேர்ந்தார். லலிதாவும், கிரிஷும், அங்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதை பார்த்து, ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டார்கள். கதையின் இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
ஆதிகேசவன் அவர்களை அமர வைத்துவிட்டு, பணியாளரிடம் அவர்களுக்கு குடிக்க ஏதாவது கொடுக்குமாறு பணித்தார். அதேநேரம் யாழினி தனது அறையிலிருந்து வெளி வருவதை பார்த்து குழப்பமடைந்தார் ஆதி கேசவன். ஈஸ்வரன் மனநிலையும் ஆதிகேசவனுடன் ஒத்திருந்தது. ஏனென்றால், யாழினி ஆதிகேசவன் கொடுத்த பட்டு புடவையை அணிந்து கொள்ளாமல், அபி கொடுத்திருந்த புடவையில் வெளியே வந்தாள். ஈஸ்வர் ஏதும் அவளை கேட்பதற்கு முன், ஆதிகேசவன் அவரை கையமர்த்தினார்.
அங்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்தது கொண்டிருந்தை பார்த்து யாழினியின் முகத்தில் ஏமாற்றம் வெளிப்பட்டது. அவளுடைய தந்தையின் மனதில் இருப்பது, அவளுக்குப் புரிந்து போனது. அவர் பட்டுப் புடவையை அணியச் சொன்னதன் காரணம் இதுதானா? அவள் ஆதிகேசவனிடம் நெருங்கி வந்தாள்.
"இதெல்லாம் என்ன பா?" என்றாள்
"யாழினி, நான் உங்கிட்ட சொன்னேன், நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்காகத்தான் செய்வேன்"
"நான் உங்கள நம்பலாம்னு கூட தான் நீங்க என்கிட்ட சொன்னீங்க. ஆனா, அப்படி இருக்கும்போது எதுக்காக என்னோட அனுமதி இல்லாம, என்னுடைய ஒப்புதல் இல்லாம. இந்த கல்யாண ஏற்பாடு செஞ்சுகிட்டு இருக்கீங்க?"
YOU ARE READING
யாதுமாகி நின்றவள் (முடிந்தது)
RomanceThis is the translated version of my story YOU ARE MY EVERYTHING with a few changes, according to Tamil background. I'm doing this for my friends and family.