தீயாய் சுடும் என் நிலவு 32

2K 80 8
                                    

"போதுமா இது தான் நடந்தது? உங்க கடந்தகால வாழ்க்கையை எதுவுமே எனக்கு தெரியாதப்ப நீங்க பேசினதையும் பண்ணத்தையும் மன்னிச்சு உங்க கூட வாழறதுக்கு நான் ஒண்ணும் மகான் இல்ல உயிரும் சதையும் மனசும் உள்ள சாதாரண மனுஷி. எல்லா பொண்ணுங்களை மாதிரி எனக்கும் ஆசை கனவு எல்லாம் இருந்துச்சு.உங்க முகத்தை கூட பார்க்க கூடாதுன்னு தான் இங்க வந்துட்டேன்.

என்ன தான் நீங்க பண்ணது  தப்புன்னாலும் என்னோட காதல் உண்மை தானே? அதனால என்னோட பொண்னை ஆனந்தமா பெற்றெடுத்தேன். நான் இங்க வந்தநாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் என்னோட ஒவ்வொரு அழுகைலயும் சிரிப்புலயும் ஸ்ரீஷாவும் அமுதனும் என்னோட என்கூடவே இருந்தாங்க.. இருக்காங்க." என்று நிறுத்தினாள்.

"எல்லாத்துக்கும் மேல நான் பிள்ளைத்தாச்சியா வெளிய போய் வேலை செய்ய கூடாதுன்னு அவங்க ரெண்டு பேரும் எனக்காக இந்த கேஃபை வாங்கி கொடுத்தாங்க. பணம் வேணா என்னுதா இருக்கலாம். ஆனா, வாங்கி கொடுத்து உன்னால முடியும்னு தைரியம் கொடுத்தது அவங்க தான்." என்று தன் தோழனை நினைத்து சிரித்தாள்.

சில நொடிகள் விழிகள் மூடி அமைதியாய் இருந்தவள் பெரு மூச்சை வெளிபடுத்தி அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.

"இப்போ சொல்லுங்க இவ்ளோவும் தெரிஞ்சப்புறம் உங்கக்கூட சேர்ந்து வாழ என்னால முடியும்னு நினைக்கிறீங்களா? நீ தான் என்னை விரும்புறியே? என்கூட சேர்ந்து வாழ்றதுல உனக்கென்ன கஷ்டம்னு கேட்காதீங்க. அதுவேற. நான் உங்களை விரும்புறேன் உண்மை தான். ஆனால், என்னோட காதல் என்னைக்கும் நினைவுகளாவே இருக்கட்டும்னு முடிவு பண்ணிட்டேன்." என்றாள் நிதானமாக.

"என்ன சொல்...ற நீ?" என்றான் தீரன் தடுமாற்றமாக.

"இந்த முடிவுக்காக காலத்துக்கும் நான் அழுவேன்னு நல்லா தெரியும். இருந்தாலும் இதுக்கு மேலயும் என்னால உங்கக்கூட நிச்சயமா வாழ முடியாது." என்றாள் மிருதி விழிகளில் நீரோடு கனத்த மனதோடு.

"இல்ல.." என்றான் தீரன் அதிர்ச்சியாய்.

"உங்களை என் உயிருக்கும் மேலா விரும்புறேன். நான் இந்த மண்ணுக்குள்ள போகிற வரைக்கும்   அது மாறாது. உங்களை விரும்பினதால இப்போ கூட உங்களை மன்னிச்சு ஏத்துக்கத்தான் என் மனசு மல்லுக்கட்டுது." என்றாள் மிருதி சோகமாய் புன்னகைத்து.

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)حيث تعيش القصص. اكتشف الآن