இவ்வாறாக இவர்கள் நட்பு வட்டம் குதுகலமாக😄🎉 எந்த இடையூறும் இல்லாமல் சென்றுகொண்டிருந்தது. இல்லாமல் இவர்கள் நட்பு வட்டம் மிகவும் ஆழமானதாக இருந்தது.
நகுலனுக்கு கடைசி செமஸ்டர் முடியும் வேலை வந்தது. கல்லூரியை விட்டு பிரியும் வேளை பிரிவு ஒருபக்கம் அவனை வருத்தத்தில் ஆழ்ந்த😖 மறுபக்கமும் அவனுக்கு நாம் எதற்காக இந்த நட்பு வட்டத்தில் சேர்ந்தோம் என்பது நினைவு வர அதை எப்படி வெளியே கூறுவது என்று தெரியாமல் திகைத்தான் ஒருவேளை தன் காதலை கூறாமலேயே பிரிந்து விடுவோமோ அவளோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை நமக்கு கிட்டாதோ என்று நினைக்கும் போதே இல்லை அதை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது🙅 என்று அவனுக்குத் தோன்றியது அவள் இல்லாத வாழ்க்கை எனக்கு வாழ்க்கை அல்ல என்று எண்ணம் ஓட எப்படியாவது நம் காதலை சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்தான் .
அப்பொழுது அங்கே வந்த நகுலனின் நெருங்கிய தோழன் சுந்தர் என்னடா ஏதோ சிந்தனையில் இருக்க என்று கேட்க.
வேற என்னடா என் காதலை பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன் என்று நகுலன் கூற இதுல யோசிக்க என்னடா இருக்கு போய் உன் காதல அவகிட்ட சொல்லுடா என்று சுந்தர் சொல்ல.அப்படி இல்லடா நான் சொல்லி அவ வேணாண்டா நா அப்பறம் இத்தனை நாள் பழகின நட்புக்கு அர்த்தமே இல்லாமல்😔 போய்விடும் டா அதான் என்ன பண்றதுனே தெரியல .
லூசாடா நீ உன்ன எந்த பெண்ணாவது வேணான்னு சொல்லுவாளா நீ தைரியமா போய் காதல சொல்லு கண்டிப்பா ஒத்துக்குவா. அதுமட்டுமில்லாம அவங்ககூட நட்பு வட்டத்தில் சேர்ந்த பிறகு அவளை காதலிக்க வில்லை அவளை காதலித்த பிறகு தாண்டா அந்த நட்பு வட்டத்தில் சேர்ந்த இது நல்லா நினைவில் வச்சுக்கோ.( ஆனால் நகுலனின் மனமோ உள்ளுக்குள் காதல் மட்டும் காரணமா என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் வந்தது )( ஏனென்றால் காதலை மட்டும் நேசிக்கும் மனமாக இருந்தால் அவன் அவர்களின் நட்பை நாம் இழந்துவிடுவோமோ என்று கவலைப்பட மாட்டான்)
நீ முதல்ல மனசுல எதையும் நினைக்காமல் நிஷாவை போய் பாரு உன் மனசுல என்ன இருக்குன்னு அவகிட்ட சொல்லு கண்டிப்பா எனக்கு நம்பிக்கை இருக்கு உன் காதல் வெற்றி அடையும் போய் சொல்லுடா
என்று தைரியமூட்டி அவனை அனுப்பி வைத்தான் (இதனை இரு விழிகள் கோபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது👿)முதலில் நிஷாவைப் பார்த்து மனதில் உள்ளதை கூற வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டான் இதுதான் சரியான வழி என்றும் தேர்ந்தெடுத்தான்.
நிஷாவை பார்க்க வேண்டுமென்று சென்றவன் அங்கு மூவரு கிடையே சிறு பதட்டம் இருக்கவும் என்ன என்று வினவினான் மூவரும் மிக கவலையாய் இருந்தனர் மூவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை . பூவன் அவர்களை பார்த்தபோது மூவர் கண்ணிலும் ஒரு தவிப்பு வேண்டுதல் இருந்தது அது எதற்கு என்று தான் புரியவில்லை அவனுக்கு
அவன் ஏன் என்ன ஆச்சு என்ன நடந்தது ஏன் இப்படி இருக்கீங்க என்ன ஆச்சுன்னு சொல்லுங்க என்கிட்ட என்று வினவினான் நிஷாவும் கூற ஆரம்பித்தாள்