பரமார்த்த குரு
தஞ்சையை அடுத்த நஞ்சையன்பட்டி என்னும் சிறப்பான ஒரு சிற்றூர் இருந்தது. அவ்வூரில் - முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், என்று ஐந்து பேர்கள் நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள்.இந்த ஐந்து பேர்களும் கல்வியறிவு என்பது கொஞ்சம் கூட இல்லாதவர்கள் நிழலுக்காகக்கூட பள்ளிக் கூட வாசலில் ஒதுங்காதவர்கள். கல்வி அறிவு இல்லையென்பது கூட ப...