வகுப்பறையில் தேர்வு எழுதும்போது தனக்கு பின்னால் அமர்ந்திருக்கும் கார்த்திக்கை மெல்லிய குரலில்..
"ஸ்ஸ்ஸ்ஸ்...கார்த்தி.."
"கார்த்தி..."
"கார்த்தி டேய்.."
"ப்ச்ச், இவன் என்ன நம்பி வந்துருக்கன்னு சொன்னான்... ஆனா என் பக்கம் கொஞ்சம் கூட திரும்பவே இல்ல...என்னத்த சொல்ல..", என சலித்துக் கொண்டு தனது பேப்பரை பார்த்து எழுதத் தொடங்கினாள் யாழினி.தேர்வு முடிந்த பின் தனது இருக்கையை விட்டு எழுந்தவன் யாழினி இல்லாததை உணர்ந்து வெளியே வந்து பார்க்க யாழினியோ காற்றில் கோலங்கள் போட்டுக் கொண்டும் தனக்குத்தானே பேசிக்கொண்டும் ஏதோ எண்ணத்தில் ஆழ்ந்திருந்தாள்.
"யாழினி, இங்க என்ன பண்ணுற..?" எனக் கேட்டவனை கொலைவெறியுடன் பார்த்த யாழினி, " என்ன தான் நீ வேண்டா வெறுப்பா படிச்சாலும் எக்ஸாம்னா எப்படித்தான் இந்த ஆர்வம் வந்துருதோ... எப்படி டா...நான்லாம் அக்ரி தான் வேணும்னு ஆர்வத்தோடு வந்தேன்.. ஆனா எனக்கு அப்பப்போ டவுட் வந்து ஸ்ட்ரக் ஆகிடுறேன்..நீ ஒரு புளோவா எழுதுறியே..?", எனக் கேட்டாள்.
"அது எப்படின்னு தெரியல யாழினி.. எனக்கு சிலது அப்படியே புளோவா எழுதிட்ரேன், சரி அதை விடு... நாளைக்கு தான் பரீட்சை இல்லைல..எங்காவது வெளில போலாமா.." என்றான்.
"ஐயோ...வாய்ப்பே இல்லை....காலைல சீக்கிரமே கிளம்பி நான் என் அத்தை வீட்டுக்கு வேற போய்ட்டேன்.. வீட்டுக்கு போனாத்தான் தெரியும் என்ன நடக்க போகுதுன்னு..இதுல உன் கூட ஊர் சுத்திட்டு வேற போன நான் அவ்ளோதான்..நான் கிளம்புறேன் கார்த்தி..அடுத்த எக்ஸாம்கு நல்லா பிரிபேர் பண்ணிட்டு வா.." என கிளம்பினாள்.
அவளை வழியனுப்பிவிட்டு தனக்குள்ளே சிரித்தவன் திரும்பி பார்க்க அங்கே ஒரு நால்வர் கூட்டம் இவனை முறைத்துக் கொண்டு இருந்ததை கவனித்து அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான். அவர்கள் இவனை போகவிடாமல் வழிமறித்து, "ஏண்டா நாங்க வெளில போலாம்னு கேட்டா அவ்ளோ சீன் போடுவ...இப்போ அவளை வெளில கூப்புடுற..என்ன நியாயம் இது..ஹான்..?" என அவர்களில் ஒருவன் கேட்க இவனோ," மச்சான் அப்படி இல்ல டா நாமெல்லாம் எப்போ வேணாலும் ஊர் சுத்தலாம்..பட் பொண்ணுங்க கல்யாணத்துக்கு முன்னாடியே சுத்துனா தான் உண்டு..இல்லனா வீட்டுக்குள்ளேயே போட்டு பூட்டிருவாங்க..."என்று சமாதானம் செய்ய முயற்சித்தான்.
YOU ARE READING
யாவும் நீயே காதலே(Completed)
Romanceஅழகான காதல் கதை. லட்சியத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் கதாநாயகனுக்கும் அவனே உலகம் என்று வாழும் கதாநாயகியிற்கும் இடையே உள்ள பரஸ்பர காதல் பற்றிய கதை தான்