யாழினி அழகாய் சிறு குழந்தைபோல டைரிமில்கை வாயில் கையில் எல்லாம்இழுக்கிகொண்டு எந்த கவலையும் இல்லாமல் சப்பி சப்பி சாப்பிட பக்கத்தில் வரிசை நாற்காலியில் அமர்ந்து இருந்த ஒரு பெண் கையில் பத்துமாதம் ஆன ஒரு பெண்குழந்தை யாழினியை பார்த்து சிரித்தது இவளும் வாயை துடைத்தவளாய் அந்த குழந்தையிடம் விளையாடிக்கொண்டிருந்தாள்.
காலை ஒரு பத்து மணி என்பதால் சென்னை வெயில் சுட்டெரித்தது அங்குள்ள பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் எல்லாம் நிழலை தேடி அமர்ந்திருந்தனர் பொது இடம் என்பதால் பொதுநலன் அற்ற மனிதர்கள் போடும் காலியான வாட்டர் பாட்டில்கள், நொறுக்கு தீனி காகிதங்கள் என ஆங்காங்கு சிதறி கிடந்தன குப்பை போடும் குப்பை தொட்டி காலியாக தனிமையில் காத்திருந்தது.அனல் பறக்கும் வெயிலும் தோற்றுபோனது அவன் பதபதப்பில்
யாழினி எங்கே என்று எழிலின் கண்கள் தேடிகொண்டு இருக்க மனமோ இனம் புரியாத அச்சத்தில் தத்தளித்தது.அய்யோ .....கடவுளே "ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு சோதனை இருக்குற பிரச்சனை போதாது என்று இந்த யாழினியும் பிரச்சனை இழுத்துக்குறா ",போரில் எதிரியை கூட சமாளிக்கிறேன் ஆனால் இந்த உறவுகள் தருகின்ற பிரச்சனையை எப்படி சாமளிக்கிறது "முருகா ....நீ தான் காப்பாத்தனும்" என்று எழில் மனதுக்குள் மௌனமாய் புலம்பிக்கொண்டே
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் தன் நண்பனோடு நுழைந்தான்.கண்கள் சுற்றும் முற்றும் தேட யாழினி போனில் தான் இருக்கும் இடத்தை மெசஜ் செய்து இருந்ததால் அந்த இடத்தை தேடி சென்ற எழிலுக்கு ஆங்கே அதிர்ச்சி காத்திருந்தது.எழிலின் கோபத்தின் முன் கோடை வெயிலும் சற்று தோற்றுதான் போனது யாழினி என்று அழைத்தவனை வாயில் சாக்லேட் கவரை சுரண்டி சுவைத்து கொண்டே நோக்கினாள் .
கோபத்தில் இருந்த எழில் கையில் இருந்த சாக்லெட் கவரை பிடிங்கி கீழே போட்டு அவள் மென்மையான கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட யாழினி திகைத்து போய் நின்றாள் .எழில் நண்பனோ "டேய் மச்சான் ,என்னடா லூசா நீ எல்லாரும் இருக்காங்க நீ வயசு பொண்ண அரையிறே அறிவு இருக்கா முதல உட்காரு பேசிக்கலாம் என்று வற்புறுத்தி அருகில் இருந்த வரிசை நாற்காலியில் எழிலை அமர வைத்தான்.
யாழினி கண்கள் கலங்கி நிற்பதை பார்த்த எழில் நண்பன் "சிஸ்டர் அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் நீங்களும் உட்காருங்க" என்று யாழினியையும் எழில் அருகில் அமர வைத்தான்.
YOU ARE READING
யாவும் நீயே காதலே(Completed)
Romanceஅழகான காதல் கதை. லட்சியத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் கதாநாயகனுக்கும் அவனே உலகம் என்று வாழும் கதாநாயகியிற்கும் இடையே உள்ள பரஸ்பர காதல் பற்றிய கதை தான்