இருவரும் ஒருவர் தோள்மேல் ஒருவர் சாய்ந்தவாறு உறங்கிப்போயினர். பேருந்து சம்பங்கிநல்லூரை நெருங்கியதும்...
"சம்பங்கிநல்லூர் இறங்குங்க" என்று நடத்துனர் குரல் கொடுத்ததும் எழிலும் யாழினியும் இறங்கினர்."மாமா எனக்கென்னமோ பயமா இருக்கு. எங்கள் வீட்டுக்கு போனாலும் எங்கள் அம்மா தலைகால் புரியாமல் குதிக்கும். அங்கே உங்கள் வீட்லயும் வைதேகி அத்தை கத்துவாங்க. எங்கே போறதுனே புரியல." என்று உதட்டை பிதுக்கியவாறு ஒருவித பதற்றத்தில் கூறியதை கண்டவன்.
"இங்கே பாரு இந்த விஷயத்துக்கு இன்னைக்கே ஒரு முடிவு கட்டியாகனும். காலத்துக்கும் இதை வளர விடமுடியாது வா முதல்ல உங்கள் வீட்டுக்கு போலாம்" என்றபடி அவளை அழைத்துக்கொண்டு அவள் வீட்டை நெருங்கினான்.
வாசலில் அமர்ந்திருந்த தாத்தா சண்முகநாதன் தோளில் இருக்கும் துண்டை சரிசெய்துவிட்டு எழுந்து உள்ளே செல்ல அதுவே செருப்பால் அடித்தது போல் இருந்தது யாழினிக்கு. சற்று விநாடியில் லட்சுமி வெளியே வந்து...
"சண்டாலி எங்கே டி வந்த? உன்னை பெத்து வளர்த்ததற்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்துட்ட. ஊர் முழுக்க அசிங்கமா பேசுது நீயும் இந்த எழிலும் ஓடிப்போயிட்டிங்கனு. என்ன?, நாங்க எல்லாம் உயிரோட இருக்கிறோமா செத்துட்டோமானு பார்க்க வந்தியா? கிளம்பு டி இங்கேயிருந்து.
"மா...ப்ளீஸ்" என்றவளை தடுத்து நிறுத்திய எழில்.
"அத்தை இப்ப என்ன ? நாங்க இரண்டு பேரும் ஓடிப்போயிட்டதாக ஊர் பேசுது. அப்படினா இந்த கலங்கத்தை நானே துடைக்கிறேன்". என்று விருவிருவென அவள் கைகளை பிடித்து வீட்டின் பூஜையறையிற்கு அழைத்து சென்றான்.
அங்கிருக்கும் குங்குமத்தை நெற்றியில் வைத்துவிட்டு
"அத்தை மஞ்சள் கையிறு திருச்சித்தாங்க." என்று உரக்க சொன்னவனை ஏற இறங்க பார்த்த லட்சுமி..."என்ன எழில் சொல்ற" என்று வினவிய லட்சுமி அத்தையிடம்.
"இன்னுமா புரியல? நான் இப்பவே இந்த நிமிஷமே யாழினி கழுத்துல தாலி கட்டப்போறேன். என் யாழினிக்கு கெட்டபெயர் வர நான் விரும்பவில்லை. சத்தியமா சொல்றேன் அவள் ஓடியெல்லாம் வரவில்லை. என்மேல உள்ள பிரியத்துல வந்தாளே தவிர வேற எந்த கெட்ட எண்ணமும் இல்லை." என்று அவன் கூறியதில் இருக்கும் ஆழமான உண்மையை புரிந்தவளாய்
ESTÁS LEYENDO
யாவும் நீயே காதலே(Completed)
Romanceஅழகான காதல் கதை. லட்சியத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் கதாநாயகனுக்கும் அவனே உலகம் என்று வாழும் கதாநாயகியிற்கும் இடையே உள்ள பரஸ்பர காதல் பற்றிய கதை தான்