சூரியன் பிரகாசித்தது என்றும் இல்லாது அன்று ஏனோ அப்படி ஒரு பிரகாசத்துடன் ஒளித்துக்கொண்டிருந்தது. வெளியே வந்து நின்றால் வற்றல் ஆகிவிடுவோம் போல அப்படி ஒரு வெப்பத்தை வாட்டி வதைத்தது.
வழுமையாய் இல்லாமல் அன்று தனக்கு மேலும் அழகூட்டி கிளம்பினாள் யாழினி.
"என்னக்கா இன்னைக்கு ரொம்ப ப்ரைட்டா இருக்க. காலேஜ்ல எதாவது பங்க்ஷன் போலருக்கு" என்று ஜீவா சந்தேகமாய் கேட்க அவளோ சிரித்துவிட்டு."இல்லை ஜீவா,இன்னைக்கு எழில் மாமா என்னை காலேஜுக்கு கூட்டிட்டு போறாரு அதான்" என்றாள் வெட்கத்துடன்.
"அப்படியா விஷயம் பார்ரா...இதெல்லாம் வேறு நடக்குதா நடக்கட்டும் நடக்கட்டும்" என்று நக்கலடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
டிப்புடிப்பு...என்று சத்தத்தை எழுப்பியவாறு எழிலின் இருசக்கர வாகனம் வந்து வாசலில் நின்றது.
"மாமா, கிளம்பலாமா" என்றாள்."ம்ம் " என்றபடி அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு அவளை அமர்த்திக்கொண்டு புழுதியை கிளப்பியவாறு வண்டியை நகர்த்தினான்.
போகும் வழியில் கூட இருவரும் எதுவும் பேசிக்கவில்லை. அவ்வப்போது அவளுடைய கூந்தல் அவன் முகத்தினை தீண்டிக்கொண்டிருந்தது. பெண்கள் மட்டுமா,அவர்களின் கூந்தலும் அவ்வளவு மென்மையே என்று உணர்ந்துக்கொண்டிருந்தான்.
காலேஜ் வாசலில் இறங்கியதும் அவளை ஒரு கரங்கள் தட்டியது.
"ஏய் யாழு என்ன உன் மாமா கூட வரேன்னு சொல்லவேயில்லை" என்றான் கார்த்திக்.
"ஹலோ மிஸ்டர் கார்த்திக். உங்களுக்கு கொஞ்சம் கூட மேனரிசஸமே தெரியாதா? இப்படி தான் ரோட்ல பொம்பள புள்ளை தோள்பட்டையை தட்டுறதா?" என்றான் எழில். இதை யாழினி எதிர்பார்க்கவேயில்லை.
"சாரி,சார் நானும் யாழினியும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்ஸ். அதான் எதார்த்தமாக தட்டினேன். என்னை மன்னிச்சிடுங்க" என்றவுடன்.
"தப்புனு சொல்ல வரல. ஆனால் எங்கே எப்படி நடந்துக்கணும்னு ஒரு வரையறை இருக்கு இல்லையா? என்னதான் ப்ரண்ட்ஸா இருந்தாலுமே ரோட்ல இந்த மாதிரி நடந்துக்க கூடாது. "
KAMU SEDANG MEMBACA
யாவும் நீயே காதலே(Completed)
Romansaஅழகான காதல் கதை. லட்சியத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் கதாநாயகனுக்கும் அவனே உலகம் என்று வாழும் கதாநாயகியிற்கும் இடையே உள்ள பரஸ்பர காதல் பற்றிய கதை தான்