எழிலின் கைபேசி அலறலிட அதை எடுத்து பேசிய எழில் சிறிது நேரம் யாரிடமும் எதுவும் பேசாமல் அவன் அறையில் அமைதியாக அமர்ந்தான். என்ன இது..? இப்படி நடக்க சாத்தியமே இல்லை... ஏன் இவ்வாறெல்லாம் நடக்கிறது என யோசித்துக் கொண்டே அவன் எண்ணங்களை பின்னோக்கி ஓட விட்டான்.
***
வெகு நேரமாகவே கார்த்திக் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். யாழினி அவனிடம் வந்து ,"என்ன டா சைலண்டா இருக்க அதிசயமா..? உன் கவி அசிங்கமா திட்டிட்டாளா...?" என சிரித்துக் கொண்டே கேட்டாள். "இல்ல யாழு.. உன் மாமா கொஞ்சம் ஹார்ஷா பேசுனது ஒரு மாதிரி இருக்கு டி.. உன் மாமாக்கு உன் மேல ரொம்ப போசஸிவ் போல..? நான் பிரெண்ட்லி ஆஹ் தட்டுவது கூட தாக்க முடியல.." என கார்த்திக் சொன்னதும், யாழினி கவனம் முழுவதும் அந்த போசஸிவ் என்ற வார்தையிலேயே இருந்தது. அவள் தனக்கு தானே சிரித்துக் கொள்வதை பார்த்து கார்த்திக், "ஓய்... அய்யய்ய... தெரியாம சொல்லிட்டேன் போல..இவை கனவுலகத்துக்கு போயிட்டா.. இவள..." அவளை ஒரு தட்டு தட்டி விட்டான். அவள் சுயநினைவுக்கு வந்தாள்."ஹான் என்ன டா..என் டா அடிக்குற...?"
"சரியா போச்சு போ.. கனவுல இருந்து வெளில வா..உன்கிட்ட ஒன்னு கேக்கணும்..."
"கேளு..புதுசா பர்மிஷன் லாம் கேக்குற.. என் மாமா பாத்து பயந்துட்டியா..."
"பச்ச்.. அது இல்ல டி.. நேத்து என்னாச்சு... ஏன் உன் வாய்ஸ் ஒரு மாதிரி இருந்துச்சு..? "
"அது நேத்து காலைல எப்போதும் போல அத்தைய பாக்க போனேனா.. அத்தை திட்டிட்டாங்க.. ஏன் அப்படி பேசுனாங்கன்னு தெரில டா.. கஷ்டமா போச்சு..அழுதுட்டே இருந்தேன் அதான் அப்படி இருந்திருக்கும்..""நேத்து நான் உனக்கு எதுக்கு கால் பண்ணேன் தெரியுமா..? நீயும் நானும் திருவிழாவுல சிரிச்சு பேசிட்டு இருந்ததை கவி பாத்துட்டு எனக்கு போன் பண்ணி திட்டுனா... எனக்கு அது அவ என்மேல வச்சுருக்குற போசஸிவ் னு தோணுச்சு.. ஆனா இப்போ உன் மாமா பேசுனது உன் அத்தை திட்டுனது பாக்குறப்போ.. தப்பா படுது.. ஒருவேளை அதை அவங்க பாத்துட்டு தான் உன்னை திட்டிருப்பங்களோ..?"
YOU ARE READING
யாவும் நீயே காதலே(Completed)
Romanceஅழகான காதல் கதை. லட்சியத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் கதாநாயகனுக்கும் அவனே உலகம் என்று வாழும் கதாநாயகியிற்கும் இடையே உள்ள பரஸ்பர காதல் பற்றிய கதை தான்