14

95 8 4
                                    

அழைப்பை துண்டித்துவிட்டு யாழினி சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்த எழிலுக்கு யாழினி அப்படி சொல்ல காரணம் புரியவில்லை. ஒருவேளை மாமா நம்மை ஏமாற்றிவிடுவானோ என்ற எண்ணம் வந்துவிட்டதோ.. இல்லை அத்தை மாமாவின் மனதை மாற்றிவிடுவாள் என்ற எண்ணம் வந்ததோ.. இவள் இப்படி சொல்கிறாளே செய்யும் அளவு இவளுக்கு தைரியம் இருக்கிறதா.. இல்லை வெறும் கள்ளம் கபடமற்ற பிள்ளைப்பேச்சா..!!

இப்படி அவனுள் ஆயிரத்தெட்டோடு ஆயிரத்தொன்பதாவது கேள்வியாக இவள் சொன்னபடி செய்தால் என்ன..? என்ற கேள்வியும் உதித்தது.

சட்டென்று விட்டத்தை நோட்டமிட்டபடி படுத்திருந்தவன் எழுந்து, தனது தலையை இடவலமாக வேகமாக ஆட்டியபடி, "என்னடா இது...இந்த புள்ள நம்மள லூசாக்குது...?" என தனக்குள்ளே கூறிக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்து கழிவறைக்கு சென்று, தனது முகத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தான் பல முறை. ஆனால் அவனது எண்ணமும் குழப்பமும் தீர்ந்தவாறு இல்லை.

"டேய் என்னடா பண்ற லூசு..?" எழிலின் நண்பன் கேட்க, "ஒன்னுமில்ல டா.." என்று சலிப்போடு சொன்னான் எழில்.

"ப்ச்ச்.. என்னடா ஆச்சு.. சொல்லி தொலையேன்...உன் மூஞ்சியே சரி இல்ல.. என்ன இளவு டா இது நடுராத்திரியில மூஞ்சி கழுவிட்டு இருக்க...முதல்ல மூஞ்சிய தொட..இந்தா.." என ஒரு துண்டை எடுத்துக்கொடுக்க அவன் முகத்தை துடைத்து பின், "சாரி டா மச்சான்.. வீட்டுல உள்ள பிரச்சனை மண்டைய கொடையுது டா.." என்றான்.

"என்ன டா லவ்வா..?" என்றான் அவன் நண்பன். என்னதான் நண்பர்களிடம் வீட்டு பிரச்சினைகளை மறைக்க நினைத்தாலும் அவர்கள் எளிதாக கண்டுகொண்டுவிடுவார்கள் எல்லா நேரமும். எனவே தான் நண்பனின் தோள்களும் தாய்மடி ஆகிறது.

"ஹ்ம்ம்..ஆமா டா.. யாழினி என் அத்தை பொண்ணு..."

முழு கதையையும் அவன் சொல்லி முடிக்க, "டேய்.. வேற லெவல் டா பொண்ணு..மச்சான் மிஸ் பண்ணிடாத... அவளை வர சொல்லு எல்லாம் நான் அரேஞ்ச் பண்ணுறேன் டா... அவளுக்கு இருக்க தைரியம் ஏன் டா உனக்கு இல்ல..?" என்றான் எழிலின் நண்பன்.

யாவும் நீயே காதலே(Completed)Where stories live. Discover now