நாட்கள் உருண்டோடின...
எழில் ஜம்முவிற்கு பறந்தோடும் நாள் வந்தது. திருமணம் என்னும் பந்தத்தில் நுழைந்து முழுவதுமாக இருபது நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் யாழினியை பிரிந்து செல்ல நேரிட்டது. தன்னுடைய சீருடையை எடுத்து பெட்டியில் வைத்தான்.
"எழில் மாமா நீ இவ்வளவு சீக்கிரம் போயே ஆகணுமா?"
"ஆமாம் யாழு நான் லீவுல வந்தே ஒரு மாசம் 20 நாள் ஆச்சு. இன்னும் ஒரு வாரம்ல லீவு முடிஞ்சிரும் ஆனால் நான் ரயில் பிடிச்சு அங்கப்போய் சேரவே மூன்று நாள் ஆயிடும் அதுகப்றம் அங்க ஒரு இரண்டு நாள் ஓய்வு எடுத்துட்டு மறுபடியும் எங்களுக்கு ட்ரெயினிங் பரேடு எல்லாம் ஆரம்பிச்சிரும். பார்டர்ல பிரச்சினை என்றால் உடனே போயாகனும் இல்லையா. அதான். இதோட நான் அடுத்த வருஷம் வருவேன்"
"என்னது அடுத்த வருஷமா"
"இப்படிங்கிறதுக்குள்ள ஓடிரும் யாழு. உனக்கு என்ன டா குறை எப்பவும் போல காலேஜ் போகப்போற, நீ எள்ளுன்னா எண்ணெயா வந்து நிக்க உன் நண்பன் கார்த்திக் இருக்கான் பத்தாத குறைக்கு அவன் குடும்பமே உன்மேல உசுரா இருக்கு அப்றம் என்ன?"
"ஆனாலும் நீ என் பக்கத்துல இல்லையே மாமா"
"ஹாஹா, தினமும் இரவு உனக்கு கால் பண்றேன். என்னைக்காவது கால் வரலைனா..."
"வரலைனா..?"
"இந்த எழில் செத்துட்டானு நினைச்சுக்க"
"ஏய் சும்மா விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லதா மாமா"
"நான் என்ன சாப்ட்வேர் வேலையா பாக்குறேன் யாழு, பார்டர்ல இருக்கிற போர் வீரன் மா, எனக்கு என்ன வேணாலும் நடக்கலாம் அதனால அப்படி சொன்னேன்" என்று அவளை இழுத்து பிடித்து அணைத்தவன்...
"எப்பவும் உன்னை நினைச்சிட்டு இருப்பேன் யாழு. நீயும் இங்கே பத்ரமாக இரு. ஓகேவா"
"ம்ம்ம்..."
விடைப்பெற்றான் இறுதியாக அவள் நெற்றியில் முத்தம் வைத்தப்படி. கணவனை பிரிந்து இருக்கும் துயரம் என்னவென்று புரிந்தது யாழுவிற்கு. அன்று மாலையே கீதா தனது பெட்டியுடன் இங்கே வந்தாள்.
YOU ARE READING
யாவும் நீயே காதலே(Completed)
Romanceஅழகான காதல் கதை. லட்சியத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் கதாநாயகனுக்கும் அவனே உலகம் என்று வாழும் கதாநாயகியிற்கும் இடையே உள்ள பரஸ்பர காதல் பற்றிய கதை தான்