5

135 8 2
                                    

"ஹோய், கலீல் What doing, man...?"
"Oh buddie, It's not கலீல்..I am எழில்.."
"ஹாஹா whatever, நீ எழுதுற ஷாயரி (கவிதைகள்) எல்லாம் that much அழகு...", என்றான் எழிலுடன் கேம்பில் இருக்கும் வட இந்திய நண்பன் கரண். அவன் கூறியதை கேட்டு தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு எழில் அவன் டைரியுடன் பேசத் தொடங்கினான். எழிலின் கைபேசி அலறியது. பார்த்துவிட்டு அதை கண்டுகொள்ளாமல் மறுபடியும் தனது முகத்தை டைரிக்குள் புதைத்தான். அவன் நண்பன் அதை பார்த்துவிட்டு, "எழில் ஏன் இப்படி பண்ணுற..?ஒரு தடவை அந்த பொண்ணுக்கு ரிப்ளை பண்ணு..", என்றான்.

எழில் அதற்கு, "உனக்கு தெரியாது கரண், ஒன்ஸ் நான் ரிப்ளை பண்ணிட்டா அவ அதை எப்பவும் எதிர்பார்ப்பா.. இங்க எப்போ என்ன நடக்குமோ யாருக்கும் தெரியாது... வீணா அவ மனசுல ஆசையை வளர்க்க கூடாது கரண்..." என்று கூற கரண், "இப்படியே சொல்லிட்டு இரு, இந்த லீவ்ல போகும்போது உனக்கு ஷாதி பண்ணி அனுப்பி வைப்பாங்க..."என்றான் நக்கலாக.

எழில் அவனை முறைத்துக் கொண்டே, "போடா...போய் வேலை ஏதாவது இருந்தா பாரு.." என்று கூறிவிட்டு எழுந்து சென்றான். அவன் கைபேசியை எடுத்து கரண் யாழினிக்கு ரிப்ளை செய்ய போக எழில் ஓடி வந்து கைபேசியை பிடுங்கிவிட்டி ஓடினான்.. ஓடியவன் பின் இவன் துரத்த.. அதை இன்னொரு நண்பன் எழில் கைகளில் இருந்து பிடுங்கி கொண்டு ஓட அவனை இவர்கள் இருவரும் துரத்த என கேம்ப் முழுவதும் கலை கட்டியது.

நாட்டிற்காக போர் முனையில் எதிரிகளுடன் சண்டையிடுவது அவர்கள் கடமை எனில் இது போன்ற கேளிக்கை கிண்டலிலும் குறைவிருக்காது. இதுபோன்ற நேரங்களில் அவர்கள் தனது பிள்ளைபருவத்திற்கே சென்று விடுவர். சில நேரங்களில் அனைவரும் சேர்ந்து விளையாட்டு, படம் பார்ப்பது, பாட்டு பாடுவது, மெட்டு போடுவது போன்றவைகள் செய்து தனது வலி, குடும்பத்தை பிரிந்திருக்கும் வேதனை, தன் பிள்ளை பிறந்த பின் முகம் கூட பார்க்க முடியாத கவலை, தேடல் என அனைத்தையும் மறந்து நாட்டின் பாதுகாப்பிற்காக இரவு பகல் பாராமல்  போராடுகின்றனர்.

யாவும் நீயே காதலே(Completed)Where stories live. Discover now