நம்ம ஊரு பொண்ணு தான் ஆனந்தி. எப்போவுமே இவள் எதையும் பற்றி கவலை படாமல் சந்தோசமாக தனது வேலைகளை மட்டும் செய்து கொண்டிருப்பவள். தற்போது இவள் தன் தாய் தந்தையை விட்டு பிரிந்து தனது அம்மாவின் தங்கை வீட்டில் தங்கி முதுகலை முதலாம் ஆண்டு படித்து கொண்டிருந்தாள். அவளது வேலையை தவிர வேற எவ்வித வீட்டு வேலைகளையும் இவள் செய்ய வேண்டும் என்று நினைத்தது கிடையாது. அவளது சித்தியும் இவள் தனக்கு வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனந்தி தன் சொந்த வீட்டில் எவ்வாறு வளர்ந்து வந்தாளோ அவ்வாறே அவள் தனது சித்தி வீட்டுளையும் இருந்தாள். அவளது சித்திக்கும் இரண்டு குழந்தைகள் இருந்தனர். இருந்தாலும் ஆனந்தியை அவர் தனது சொந்த மகளை போலவே எண்ணி அவளது சித்தி கல்யாணி பார்த்துக்கொண்டார்.
இவளது முழு நாள் வேலைகளையும் சிறிய பட்டியலிட்டு சொல்லி விடலாம். காலையில் எழுந்து தன்னை சிறியதாக அலங்காரம் செய்து கொண்டு பின் தனது சித்திக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் சமயல் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து கொடுப்பாள். பின் அவள் கல்லூரிக்கு செல்ல கிளம்பி விடுவாள். கல்லூரி படிப்பிலும் இவள் முதல் வருபவள் இல்லை. நடுத்தரமாக படிக்கும் மாணவியே.
மறுபடியும் மாலை கல்லூரியில் இருந்து வந்ததும் கல்லூரி பாடம் இருப்பின் அதை படித்து கொண்டும் தனது சித்தி குழைந்தைகளிடம் விளையாடிக் கொண்டுமிருப்பாள். இதுதான் இவளுடைய முழு நேர வேலையாக இருந்தது. கூடவே ஆனந்திக்கு வீட்டில் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டிருந்தனர் அவளது பெற்றோர்கள். அவளுக்கு விருப்பமே இல்லை என்றாலும் அவளது பெற்றோருக்காக ஒப்புக்கொண்டாள் ஆனந்தி.வாழ்க்கையில் எந்தவித குறிக்கோளும் ஆனந்திக்கு இல்லை என்றாலும் தனது திருமண வாழ்வில் எதிர்பார்ப்புகள் சிலவற்றை வைத்திருந்தாள். மிகப் பெரியதாக இல்லை என்றாலும் அவளது ஆசைகள் எதிர்பார்ப்புகள் சிலவற்றை மட்டும் வைத்து கொண்டு காத்திருந்தாள்.
ஒரு நாள் ஞாயற்றுக் கிழமை ஆனந்தியின் அப்பாவும் அம்மாவும் அவளது தம்பி அன்புவும் ஆனந்தியை பார்க்க அவளது சித்தி வீட்டிற்கு வருகின்றனர். இந்நேரத்தில் ஆனந்தியின் தாய் மாமாவும் army ல இருந்து விடுமுறைக்காக வந்திருக்கிறார். இச்சமயத்தில் ஆனந்தியின் சொந்தக்காரர் ஒருவர் ஆனந்திக்கு ஒரு நல்ல குடும்பத்தில் இருந்து வரன் வந்ததாக அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆனந்தியின் பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனந்தியின் பெற்றோர் அந்த வரணுக்கு ஆர்வம் காட்டவே ஆனந்தியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டாரை அவளது தாய் மாமா வீடு அனைவருக்கும் வசதியாக இருக்கும் பட்சத்தில் அங்கு அனைவரும் சந்திக்க திட்டமிடுகிறார் ஆனந்தியின் தந்தை. ஆனந்தி மற்றும் அவரது குடும்பமும் இப்பொழுது கிளம்பி அவளது தாய் மாமா வீட்டிற்கு வருகின்றனர்.
ŞİMDİ OKUDUĞUN
விவாஹத்தின் விதி
Paranormalஆயிரம் ஆசைகள் மற்றும் கனவுகள் கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை