எங்கள் அழகியே...

52 16 17
                                    

💔நான் சிரித்து கொண்டு மட்டுமே இருக்கின்றேன் என்பதால் தான் நீ உன் வார்த்தையால் என்னை சிதைத்து கொண்டே இருக்கின்றாயோ

К сожалению, это изображение не соответствует нашим правилам. Чтобы продолжить публикацию, пожалуйста, удалите изображение или загрузите другое.

💔நான் சிரித்து கொண்டு மட்டுமே இருக்கின்றேன் என்பதால் தான் நீ உன் வார்த்தையால் என்னை சிதைத்து கொண்டே இருக்கின்றாயோ.....????

💔நான் சிந்தும் புன்னகைக்கு பின்னால் புழுவை விட புழுங்கி பூப்பதற்கு முன் வாடிய என் முகம் எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை....

💔சிதைந்து சிதைந்து சிதறி போன என் இதயசித்திரத்தை மறைத்து வைத்த நான்....உன் கண் முன் என்றுமே காதல் சித்திரமாக மட்டுமே வலம் வர ஆசை கொண்டேன்....

💔என் ஆசைகள் எல்லாம் என் உழைப்பால் நிறைவேறிய ஒரு பக்கத்தை பார்த்த பலர்....அந்த வெற்றி எனும் கனியை நான் வளர்ப்பதற்காக என் குருதியை வேர்வையாக சிந்தியதை அறிய வாய்ப்பில்லை...

💔 வாய்ப்பில்லை என்று என்னை விரட்டிய பலர் கண்முன்... விழாமல் வாழ்ந்து காட்டிய நான் எதற்காகவும் வளைந்து கொடுக்காமல் என் இலக்கை அடைய நான் இழந்தது எண்ணற்ற இன்பங்களை என்பதை நான் மட்டுமே அறிவேன்....

💔 வாய்ப்புகளை தேடி பலர் வாசலை மிதித்த நான்.....வாய்ப்புகள் என்னைத் தேடி வரும் நிலையை உருவாக்க மெழுகாய் என்னை உருக்கி கொண்டதை நீங்கள் அறிந்திட வாய்ப்பில்லை...

💔 நான் என் அன்னையின்  மூலம் ஒருமுறை பிறந்தேன்.... ஆனால் என் இலக்கை அடைய பல முறை செத்து செத்து பிழைத்தேன்...

💔இலக்கை அடைந்த நான் இறுதி வரை அதில் பயணிக்கவில்லை என்று என்னை விரும்பும் பல கோடி மக்கள் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர் துளிகளிலும் நான் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவேன்.... என்னை அன்றும் இன்றும் என்றும் போற்றும்  உங்களுக்காகவே.....

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

🙏எங்கள் அழகியே...... நீ ஒருத்தி மட்டுமே என்றும் எங்களின் அழகியே... நீ ஒருமுறை இறந்தாலும் ஒவ்வொரு நொடியும் உன் ரசிகர்களால் கோடிமுறை பிறந்து கொண்டே இருக்கின்றாய்....... ஒருவர் இறந்த பிறகு அவரை நாம் இழந்து விட்டோம் என்று காலப்போக்கில் மறந்து விடும் இயல்பை இயக்கி வைத்த இந்த உலகம்..... உன்னை அனுதினமும்  எங்கள் இதயத்தில் புதிது புதிதாக வடிவமைத்து போற்றிக் கொண்டு இருப்பது  இதுவரை யாரும் கண்டிராத வெற்றி........ இந்த வெற்றி  உன் ஒருத்திக்கு  மட்டுமே  என்றும் நிலைத்து நிற்கும்... வாய்ப்பிருந்தால் மீண்டும் வந்து போ என்று பலர் கேட்டாலும்... உன் ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் உன்னை போற்றி புகழ்ந்து வடிவமைத்து  வாழ்ந்து கொண்டும்... உ ன்னை வாழ வைத்துக் கொண்டும் தான்  இருக்கிறார்கள்...🙏

🙏மீண்டும் வருவேன் 🙏நம் அழகியுடன் உங்கள் நான் சக்தி 🔱

🔱 மற்றும் இந்து சந்திரன் ரெடியின் கிறுக்கல்கள்... ❤என் அழகிக்காக❤Место, где живут истории. Откройте их для себя