ஆழம்

144 9 28
                                    

                    ருமுகில்கள் சூழ்ந்த ஒரு கார்கால மாலை நேரமது. மண்ணின் ஈரமான பதத்தைத் தன் பாதணியால் அலசி ஆராய்ந்துகொண்டே வீட்டிற்கு வெளியே இருந்த நீண்ட வாங்கில் அமர்ந்துகொண்டு இருந்தான் அமான்.

"வார்த்தைகளைக் கொட்டினால் அள்ள முடியாது. மெல்லவும் முடியாது.

          இந்த நாக்கு இருக்கின்றதே.. மூன்றே அங்குலம்தான். ஆனால் டம்மாத்துண்டாக இருந்துகொண்டு ஆறடி மனிதனையும் போட்டு என்ன பாடு படுத்துகின்றது!


          'தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு..'. ஹ்ம்! தீ அதற்குத் தெரியாமலே சுட்டு விடுகிறது. ஆனால் நாம் தெரிந்தறிந்தே எம் நாவினால் சுடு சொற்கள் உதிர்த்துவிடுகின்றோம்.."

குற்றவுணர்ச்சியில் தனக்குத்தானே கருத்துக்கள் சொல்லிக்கொண்டு தன்னைத்தானே திட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவன் தன் மீதுள்ள கோபத்தை நிலத்தின் மீது காட்டிக்கொண்டிருந்தான்.

கண்கெட்ட பின்பு இந்த சூர்ய நமஸ்காரம் உனக்குத் தேவையா என்ற ரீதியில் அவனைப் பார்த்திருந்தது பக்கத்திலிருந்த மாமரமொன்று..

வார்த்தைகளின் வீரியம் எந்த ஆழம் வரைக்கும் சென்று வரக்கூடியதென்று எமக்கு நன்றாகத் தெரியும். என்னதான் தெரிந்திருந்தாலும் ஒரு கட்டத்தில் நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் இஷ்டமேனிக்கு வார்த்தைகளை விடுகின்றோம், ஆராயாது! சூடு கண்டும்  உணர்வில்லாத பூனையாய் எத்தனை தடவைகள் பட்டிருந்தாலும் அந்த ஒரு விடயத்தில்  சரியாக நடந்து கொள்வதென்பது சவாலான ஒன்றாகவே இருக்கின்றது. இல்லையா?

அவனும் அதையே தான் செய்துவிட்டு வந்து இங்கு அமர்ந்து வருந்திக்கொண்டு கிடந்தான். எப்படி அதனை சரிசெய்வதென்று எவ்வளவு யோசித்தும் ஒரு மண்ணும் தோன்றவில்லை அவனுக்கு.

கதைச் சொட்டுக்கள் Where stories live. Discover now