ஆராய்ச்சி

114 9 14
                                    

                    பாடசாலையின் விஞ்ஞான ஆய்வு கூடத்தினுள்ளே அமர்ந்திருந்தனர் அந்த சாதாரண தர வகுப்பு மாணவர்கள். உயிரியல் பாடத்துக்கான எக்ஸ்பரிமன்ட் ஒன்றுக்காக வந்திருந்தவர்கள், உரிய பொருட்களை ஆசிரியர் தாயாராக எடுத்து வைக்கும்வரை வளவளத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த மாணவர் குழுவுக்கு நடுவில்தான் நானும் அமர்ந்திருந்தேன், எனக்கே சொந்தமான என் சிந்தனையுலகில் தொலைந்துபோய்!

இந்த.. சயன்ஸ் லேப்புக்கு வருவதென்றாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி. எங்கள் பாடசாலையினுடையது கொஞ்சம் சிறிய கூடமாதலால் வகுப்பிலுள்ள எல்லோரும் வசதியாக அமர்ந்து கொள்வதென்பது கஷ்டம்தான்.

முண்டியடித்துக்கொண்டு ஓடிவரும் சக மாணவிகளுக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகாத குறையாக இழுகிக்கொண்டு வந்து ஒருவாறு இந்த நீண்ட மேஜையின் நடுவே இடத்தைப் பிடித்து அமர்ந்து கொண்டேன். என்னுடைய நட்புக் குழுவும் இடையிடையே புகுந்துகொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டேன்.

எனக்கு இங்கு பிடித்தது ஒன்றே ஒன்றுதான். எப்பொழுதெல்லாம் இங்கு வருகின்றேனோ, அப்பொழுதெல்லாம் என் கண்கள் எப்பொழுதும் அதன்மீது தான் இருக்கும். இதோ.. இப்போதும்கூட அதன்மீதுதான் கண்களைப் பதித்துக்கொண்டு அமர்ந்திருக்கின்றேன்.

மைக்ரோஸ்கோப்! அதாவது, அந்த மூலையில் கண்ணாடிப் பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றே.. கூட்டு நுணுக்குக்காட்டி! அதுதான்!

உயிரியல் பாடத்தின் மீதான எனது காதலுக்குத் தூது போனதும் இதே மைக்ரோஸ்கோப்தான். ஏனெனில் எனக்கு 'மைக்ரோஸ்கோப்பிக் வீவ்' மிகவும் பிடிக்கும்.

ஒவ்வொரு தடவையும் இங்கு வரும்போது இன்றாவது அந்த மைக்ரோஸ்கோப்பை வைத்து ஆசிரியர் ஏதாவது செய்து காட்டினால் நன்றாக இருக்குமே என்று எண்ணிக்கொள்வேன். ஒரு சில தடவைகள் அதனைப் பயன்படுத்திய அனுபவம் உண்டுதான். ஆனாலும்.. மேலும் மேலும் அதனைப் பாவனை செய்து பார்க்க வேண்டுமெனும் அவா எனக்குள்ளே!

கதைச் சொட்டுக்கள் Where stories live. Discover now