பாவை உதிர்த்த பன்னீர்த்துளி

148 5 4
                                    

#மாற்றம்

                    நீலவானத்து முகில்கள் அங்கங்கு தனற்பந்தங்களை ஏந்தியவண்ணம் பகல்நேரத்தை வழியனுப்பிக் கொண்டிருந்தன.

அந்திவானப் பின்னணியில் பறந்துகொண்டிருந்த வௌவால்களின் இறக்கை வடிவத்தை ஆராய்ந்துகொண்டே திண்ணையில் அமர்ந்திருந்தாள் இமாரா.

பக்கத்துவீட்டில் முந்தைய நாள் இடம்பெற்ற மரணசெய்தி கேட்டுவந்து குழுமியிருந்த ஜனம் சற்றுக் குறைந்துவிட்டிருந்தது. அவளும் அங்குதான் சென்று வந்திருந்தாள். எதுவும் செய்யத் தோன்றாது திண்ணையில் சும்மா அமர்ந்திருந்தவளது மனமோ என்றும் போல் அமைதியாய் இல்லை.

திடீரென்று தனக்கு என்ன நடந்துவிட்டதென்று புரியாத அப்பாவையோ யோசனையில் ஆழ்ந்தாள்.

முந்தாநேற்றுத்தான் தன் சகபாடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்று வந்திருந்தாள். அங்கு தன் தோழியருடன் போட்ட ஆட்டமும், சவுண்ட் சிஸ்டத்தின் இசை முழக்கமும், முகத்தில் பூசி வீணாக்கிய கேக்கும் ஏனோ ஞாபகத்திற்கு வந்தன.

சில வாரங்களுக்கு முன்புதான் ரமழானும் விடைபெற்றுச் சென்றிருந்தது. எப்போதுதான் அந்த டீவியை மீண்டும் இந்தப்பக்கம் திருப்புவதென்று ஏங்கிக் கிடந்தமையும், மூலையில் தூசு படிந்து கிடந்த இறைமறையைக் கண்டும் காணாமல் இருந்தமையும், பசி மறக்கவென்று நாளையும் பொழுதையும் செல்போனிலும் தூக்கத்திலும் கழித்தமையும் மீண்டும் மீண்டும் மனதை வந்து குடைந்தன.

மாதங்கள் மூன்றுக்கு முன்னர்தான் பாடசாலையின் கல்விச் சுற்றுலாவுக்குச் சென்று வந்திருந்தாள். பேரூந்தில் ஒலிக்கவிட்டிருந்த நாகரிகமற்ற இசை கலந்த பாடல்களும், அவற்றுக்கேற்றாற்போல அங்கு நடந்தேறிய நடனக் கச்சேரியும், உற்சாகம் உச்சந்தலைக்கு ஏறிச் சென்றதால் தவறவிட்ட தொழுகைகளும் மனக்கண்கள் முன்பு தோன்றி பயம் காட்டின.

"இமாரா.. என்ன செய்ற திண்ணைல உக்காந்துகொண்டு? மஹ்ரிப் நேரமாகுற. உள்ளுக்கு வாங்க"

கதைச் சொட்டுக்கள் Where stories live. Discover now