ஆகாயமெங்கும் இரவுப் போர்வையின் ஆட்சியெல்லைக்கு உட்பட்டுவிட்ட நேரம்.
கம்புக் கலையலங்காரங்களுடன் இன்னுமே புத்தம் புதிதுபோல் அம்சம் கொண்டிருந்த அவ்வறையின் உள்ளே உரத்துப் பேசுவது அறைக்கு வெளியே கேட்காதாம்.
அந்த உறுதியில்தான் தன் இல்லழகியுடன் கஷ்டப்பட்டுக் கடின பாவனையில் பேச்சு நடத்திக் கொண்டிருந்தான் அக்மல்.
அவளோ கட்டிலின் ஓரத்தில் கால்களை மடித்தமர்ந்து கொண்டவளாய் கீழே பார்த்த வண்ணம் என்றுமில்லாத கண்டிப்பைத் தன் கணவனின் பேச்சில் கண்டு வியப்பான முகபாவனைகளை மாற்றி மாற்றி ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளருகில்தான் அவளது செல்போன் திரை அடிக்கடி ஒளிர்ந்து மங்கியவாறு கிடந்தது.
துடினம் கொண்டதொரு நான்கு வயதுக் குட்டிப் பாவைக்கு அவள் தாயென்றால் விழிச் சோடிகள் விரிந்து சிமிட்டும் வண்ணம் எத்தனை இளமையான அழகு அவளுக்கு. அவள் பேச்சில் தத்தெடுக்கும் நளினமும் பூனைக்குட்டிக் கண்களும் அவளைக் கடிந்துகொள்வதை அவனுக்கு இமாலயம் தொடும் செயலாக்க முயன்றன.
ஆனாலும் ஒரு முடிவுடன்தான் நாளை விடிய வேண்டுமென்ற தீர்க்கத்துடன் இருந்தான் அவன்.
இளஞ்சிவப்பு நிற புசு புசு பஜாமாவுடன் கட்டிலுக்கு நடுவே பொம்மைக்குட்டி போல உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தான். கன்னங்களும் மூக்கும் இன்னுமே சிவந்துதான் இருந்தன. அழுதுகொண்டல்லவா தூங்கினாள்!
இரவுணவையடுத்து கலர் க்ரேயான்களை வைத்துத் தாளில் கீறி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தன் துடுக்குத்தனம் தலைகாட்டவே அறையின் ஒரு சுவரில் கலர் கலராய்க் கிறுக்கி வைத்துவிட்டாள். குழந்தையென்றால் அப்படித்தானே..
அறைக்குள் நுழைந்த மாத்திரத்தில் தனது அபிமான சுவரையும் குழந்தையின் கையில் க்ரேயான்களையும் கண்டவளின் ஆத்திரம் நேத்திரங்களை மறைக்க, திட்டியவாறு குழந்தையிடமிருந்து க்ரேயானைப் பிடுங்கியவள் முதுகிலும் நன்றாக இரண்டு இனாமாகவே வைத்துவிட்டாள். சரியாக அப்போதுதான் அவள் கணவனும் அறையினுள்ளே நுழைந்தான்.
YOU ARE READING
கதைச் சொட்டுக்கள்
Historia Corta#1 சிறுகதைகள் என் பேனா உதிர்த்த சின்னஞ் சிறு கதைச் சொட்டுக்கள் சில..