எதிர்வினை

147 7 14
                                    

                    கலவனின் பளிச் பளிச் கதிர்கள் கண்களைக் கூசச் செய்துகொண்டிருந்த ஒரு உச்சி வேளையது.

உடலுக்குள்ளிருந்த நீரையெல்லாம் உருக்கி வெளியேற்றிக் கொண்டிருந்த உஷ்ணமான அந்த வெய்யிலையும் கண்டுகொள்ளாது இடைக்கிடை நெற்றி வியர்வையைக் கைக்குட்டையால் ஒற்றி எடுத்துக் கொண்டிருந்தார் அன்சார்.

தன் முன்னே ஒவ்வொரு தளமாக உயர்ந்து சென்று கொண்டிருக்கும் தன் கனவு வீட்டைக் கண்டு களித்துக் கொண்டிருந்தவர் அருகில் நின்றிருந்த, கான்ட்ராக்ட் பொறுப்பை ஏற்றிருந்த மனிதரிடமும் இடைக்கிடை சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.

"ஊடு கட்டுறதே ஆச்சு. குறையொண்டும் வந்துடப்படாதே.." என்று சொல்லிச் சிரித்தவர், தன் திட்டத்துக்கு ஏற்றவாறே வீடு கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறதென்பதை உறுதி செய்வதற்காக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டிற்குள் நுழைந்தார். 

அன்சார் தன் வீட்டிற்குள் நுழைந்ததுதான் தாமதமென பக்கத்து வீட்டுத் திண்ணையில் நின்று மஹீஷாவுடன் கதைத்துக் கொண்டிருந்த ஸைத்தூன் மாமி முகத்தை மாற்றிக்கொண்டு கன்னத்தைக் கையில் தாங்கி கதைசொல்லத் தயாரானார், சேலைத் தலைப்பு விலகியதையும் கண்டுகொள்ளாமல். அவரது ரியாக்ஷனைப் பார்த்ததுமே மஹீஷாவுக்கு எதற்குத் தயாராகின்றார் அவரென்பது புரிந்தது.

"மாமி.. கறி அடுப்புல வச்சேன். போய் பாத்துட்டு வரவா?" என்றவாறு கழன்றுகொள்ள முயற்சித்தவளை இவர் விட்டால்த்தானே?

"அல்லாஹு.. வா புள்ள. கறி வீணாகிடாம. நீ வந்து அத பாரு. நான் சொல்ல வந்தத சொல்லிட்டு போரேன்.." என்றவாறு மஹீஷாவின் வீட்டிற்குள் அவள் அழைக்காமலே நுழைந்துகொண்டு பற்றாத குறைக்கு அவளை சமையலறை வரை வழிநடத்திக் கொண்டும் சென்றார்.

எங்காவது சென்று தலையை முட்டிக்கொண்டு போய் சேர வேண்டும் போல இருந்தது மஹீஷாவுக்கு. தலைவிதியை நொந்துகொண்டு நடந்தாள், அந்தத் 'தலைவலி'யின் பின்னே..

கதைச் சொட்டுக்கள் Where stories live. Discover now