21 முடிவு
ருத்ரனின் கதையைக் கேட்ட சக்தி திகைத்து நின்றாள்.
"மாயாவோட சாவுக்கு முன்னாடி, ருத்ரனை மாதிரி ஒரு திடமான மனுஷனை பார்க்கவே முடியாது. ஆனா அவளோட சாவுக்கு பிறகு, ஒவ்வொரு நாளும் அவன் பலவீனம் அடஞ்சிகிட்டே போனான். அவ தன்னுடைய மடியில, தன் கண் முன்னாடி இறந்ததை அவனால தாங்கவே முடியல. உயிரை விடுறதுக்கு முன்னாடி, அவ சொன்ன கடைசி வார்த்தைகள், அவன் மனசுல ரொம்ப பெரிய பாதிப்பை ஏற்படுத்திடுச்சி. மாயாவை உரிச்சு வெச்சது போல இருக்குற உங்களை பார்த்த போது, அவளோட கடைசி வார்த்தைகள் அவனுக்கு ஞாபகம் வந்திருக்கணும். உங்களை மாயா தான் அவனுக்காக அனுப்பினதா அவன் நம்புறான். நீங்க பார்க்க அச்சு அசலா மாயா மாதிரியே இருக்கீங்க. இதைவிட அவனுக்கு வேற என்ன வேணும் அவளோட வார்த்தைகளை நம்புறதுக்கு?"
சக்தியின் கண்கள் மாயாவின் புகைப்படத்தின் மீது நிலைத்து நின்றது.
"என் தம்பியை ஏத்துக்கங்கன்னு நான் உங்களை கட்டாயப்படுத்த மாட்டேன். இது உங்களுடைய வாழ்க்கை. அதை முடிவு பண்ண யாருக்கும் எந்த உரிமையும் இல்ல. எப்படிப்பட்ட வாழ்க்கை வாழனும்னு முடிவு பண்றதுக்கான முழு அதிகாரமும் உங்களுக்கு இருக்கு. நீங்க இதுக்கப்புறம் அவனோட இருக்க வேண்டாம்" என்றாள் துர்கா தொண்டை அடைக்க.
மாயாவின் புகைப்படத்தின் மீது இருந்த தன் கண்களை, துர்காவின் பக்கம் அதிசயத்துடன் திருப்பினாள் சக்தி.
"அப்படி சொல்லாத துர்கா... நம்ம ருத்ரா சுக்கு நூறா உடஞ்சி போய்விடுவான்" என்றார் சித்தி அபிராமி கெஞ்சலாக.
"ஆமாம் துர்கா, நம்ம ருத்ரனுடைய நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாரு" என்று அழுதார் பாட்டி.
"இல்ல பாட்டி. அவங்களுக்கு எதிர்காலம் இருக்கு... வாழ்க்கை இருக்கு.. நம்ம சுயநலமா யோசிக்க கூடாது"
சக்தியின் பக்கம் திரும்பிய துர்கா,
"எனக்கு என் தம்பியை பத்தி நல்லா தெரியும். அவன் இப்பல்லாம் கட்டுப்படுத்தவே முடியாதவனா மாறிக்கிட்டு இருக்கான். நீங்க சேலத்துக்கு திரும்பி போகலாம். ஆனா அவன் உங்களை எங்கிருந்து கொண்டு வந்தானோ அதே இடத்துக்கு நீங்க திரும்பி போனா, நிச்சயமா அவன் உங்களை மறுபடியும் தேடி கண்டுபிடிச்சிடுவான். அதனால வேற எங்கேயாவது போங்க. உங்களுக்கு வேணும்னா, அதுக்கான ஏற்பாடை நாங்களே செஞ்சு கொடுக்கிறோம்" என்றாள் துர்கா.
DU LIEST GERADE
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )
Romantikஉச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந...