27 சுமங்கலி பூஜை
சுமங்கலி பூஜையன்று ருத்ரனுக்காக விரதம் இருந்து, அவனை பிரமிக்க செய்தாள் சக்தி. அது திருமணமான பெண்களால் பிரத்தியேகமாய் செய்யப்படும் பூஜை. தன் கணவனின் நோய் நொடியற்ற நீண்ட ஆயுளுக்காகவும், நல்வாழ்வுக்காகவும் பெண்கள் விரதம் இருக்கும் நாள். அது ருத்ரனுக்கு தெரியும். ஒரு நாள் முழுக்க எதுவும் சாப்பிடாமல் இருந்து, மாலையில் விளக்கேற்றி, பூஜை செய்த பின் சாப்பிடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொரு வருடமும், துர்கா தன் கணவனுக்காக அன்போடும், மரியாதையோடும் அந்த விரதம் ஏற்பதை அவன் பார்த்திருக்கிறான். அதையே சக்தி தனக்காக செய்திருக்கிறாள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.
அவன் வைத்த கண் வாங்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த சக்தி,
"என்னங்க..." என்றாள்.
"ஹாங்...?" என்று தெளிந்தான் ருத்ரன்.
"உங்க அக்கா பூஜை செஞ்சதையெல்லாம் பார்த்திருக்கேன்னு சொன்னீங்க. அப்படின்னா இப்போ என்ன செய்யணும்னு உங்களுக்கு தெரியாதா?"
"ஆங்..."
அவன் கையில் குங்கும டப்பாவை கொடுத்துவிட்டு,
"என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க" அவள் குனிந்து அவன் காலை தொட, ருத்ரன் கிளீன் போல்ட் ஆனான்.
முதலில், புடவை அணிந்து அவன் புத்தியை தடுமாறச் செய்தாள். இப்பொழுது, அவனிடம் ஆசிர்வாதம் பெற்று அவன் இதயத்தையும் தொட்டாள்.
அவளை தன் காலை தொட விடாமல் தடுக்க வேண்டும் என்று தான் அவனுக்கு தோன்றியது. ஆனால், அவள் தொட்ட போது, அப்படி ஒரு பரவசம் அவன் உடலெங்கும் பரவியது. அவளை அப்படியே பார்த்துக் கொண்டு பிரம்மை பிடித்தவன் போல் நின்றான் ருத்ரன். அவன் காலைத் தொட்ட பின் எழுந்து நின்ற சக்தி, அவன் முகத்தின் முன் தன் விரல்களை சொடுக்கினாள். தன் முகத்தை பின்னால் வெட்டி இழுத்தான் ருத்ரன். அவன் கையில் இருந்த குங்குமடப்பாவின் மீது தன் பார்வையை ஓட்டினாள் சக்தி. அதிலிருந்து ஒரு துளி குங்குமத்தை எடுத்து அவள் நெற்றி வகிட்டை நிரப்பினான் ருத்ரன்.
VOUS LISEZ
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )
Roman d'amourஉச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந...