49 சிந்திக்கும் திறன்
ருத்ரனின் அறைக்கு வந்தான் சிவா. ருத்ரனை பார்த்து புன்னகைத்த சிவா, சக்தியை பார்த்தும் புன்னகைத்தான். அவள் ஒரு செயற்கையான புன்னகையை உதிர்த்துவிட்டு அமைதியாய் அமர்ந்தாள்.
"கதவை சாத்திட்டு வா" என்றான் ருத்ரன்.
சரி என்று தலையசைத்த சிவா, ருத்ரன் கூறியதை செய்தான். ருத்ரன் தன்னிடம் ஏதோ மிக முக்கியமான விஷயம் பேச போவதைய் யூகித்துக் கொண்டான். அங்கு சக்தியும் இருந்ததை பார்த்து அவனுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ருத்ரன் அவளை நம்புகிறான். அதனால், எந்த ரகசியத்தையும் அவன் அவள் முன் பேசுவது ஒன்று ஆச்சரியம் அல்ல.
"சொல்லு ருத்து"
"தக்ஷிணாமூர்த்தியை ஃபாலோ பண்ணனும்"
"தட்சணாமூர்த்தியையா ஆனா, ஏன்?"
"நீயா ஏன்னு கேக்குற? இப்படி நீ கேட்பேன்னு நான் எதிர்பார்க்கல" என்றான் ருத்ரன்.
"நீ எதுக்காக அவரை ஃபாலோ பண்ண சொல்றேன்னு எனக்கு நல்லா புரியுது. அவரு உன்னை விட்டுட்டு வர சொல்லி சக்தி கிட்ட சொன்னாரு. அதனால அவரை நீ கண்காணிக்கணும்னு நினைக்கிற. அது தானே?"
"ஆமாம்..."
"ஆனா, நீ அப்படி சொன்னதுக்கு அது மட்டும் தான் காரணமா இருக்கும்னு எனக்கு தோணல. அதனால தான் ஏன்னு கேட்டேன்"
"அவரு இதுக்கப்புறம் சும்மா இருப்பாருன்னு எனக்கு தோணல. மாயாவோட சாவுக்கு நான் தான் காரணம்னு என் மேல அவரு பயங்கர கோவத்துல இருக்காரு. அதனால, அவரு நிச்சயமா ஏதாவது செய்வாரு. அவர் என்ன செய்றார்னு நான் தெரிஞ்சுக்கணும்"
அவர்கள் பேசுவதை உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தாள் சக்தி. அதோடு மட்டுமல்லாமல், சிவாவின் முக பாவத்தையும் அவள் கவனிக்க தவறவில்லை.
"நான் என்ன செய்யணும்னு நீ நினைக்கிற ருத்து?"
"அவரோட ஃபோன் கால்சை ட்ராக் பண்ணா பெட்டரா இருக்கும். கூடவே, சில பேரை அப்பாயிண்ட் பண்ணி, அவர் எங்க போறாரு, யாரை மீட் பண்றாரு, என்ன செய்றாரு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்"
CZYTASZ
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )
Romansஉச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந...