6 திட்டப்படி...
சக்தியுடனான நடராஜனது நெருக்கத்தை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை ருத்ரனால். சக்தியின் முகபாவத்தை உன்னிப்பாய் கவனித்தான் அவன். நடராஜன் ஏதோ கூற, ஆம் என்று தலையசைத்து மெலிதாய் புன்னகைத்தாள் சக்தி. நடராஜனோ முகமெல்லாம் பல்லாய் சிரித்துக் கொண்டு நின்றான். அது ருத்ரனின் வயிற்றை எரியச் செய்தது. பொதுவாக, அவன் பொறாமை குணம் கொண்டவன் அல்ல. ஆனால் இப்பொழுது, அவனுக்கு பொறாமையாய் இருந்தது. அவனைப் பொறுத்தவரை, அந்தப் பெண் அவனுக்கு சொந்தமானவள். அவனிடம் மட்டும் சிரித்து பேச வேண்டியவள்.
தனது கைபேசியை எடுத்து, துப்பறிவாளன் சந்திரசேகருக்கு ஃபோன் செய்தான். அவனது அழைப்பை உடனடியாய் ஏற்றான் சந்திரசேகரன்.
"சொல்லுங்க ருத்ரன் சார்"
"நான் எது சொன்னாலும், கேள்வி கேட்காம, உடனே செய்ற சில பேர் எனக்கு வேணும்"
"வேலை கிடைச்சா போதும்னு நிறைய பேர் காத்திருக்காங்க சார்..."
"அவங்க எதிர்பார்க்கிறதை விட அதிகமான சம்பளம் கொடுப்பேன்"
"சரிங்க சார். என்ன வேலை?"
"அடியாள் வேலை"
"எனக்கு ஒரு கேங்கை தெரியும். அவங்க காசுக்காக என்ன வேணா செய்வாங்க"
"அவங்க எனக்கு உண்மையானவங்களா இருக்கணும்"
"இருப்பாங்க சார்"
"அவங்க கிட்ட விஷயத்தை சொல்லிட்டு என் நம்பரை குடுங்க"
"சரிங்க சார்" அழைப்பை துண்டித்தான் சந்திரசேகர்.
*யார் இந்த ருத்ரன்? எதுக்காக சேலத்துக்கு வந்திருக்கான்? எதுக்காக அவனுக்கு அடியாளுங்க தேவைப்படுறாங்க?*
எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்... கை நிறைய பணம் கொடுக்கிறான். அதற்கு மேல் வேறு என்ன வேண்டும்? ருத்ரன் கேட்டது போல் வேலையை கச்சிதமாய் செய்யக்கூடிய மகாதேவனுக்கு ஃபோன் செய்தான் சந்திரசேகரன்.
ESTÁS LEYENDO
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )
Romanceஉச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந...