39 ஓசூரில் சிவா
சிற்றுண்டியை தயாரித்த சக்தி ருத்ரனுடன் அமர்ந்து அதை சாப்பிட துவங்கினாள். வழக்கம் போல் அதை ருசித்து சாப்பிட்டான் ருத்ரன்.
"ஏங்க, உங்க அம்மாவை பத்தி சொல்லுங்களேன்" என்றாள் சக்தி சாப்பிட்டபடி.
"எங்க அம்மா ரொம்ப ஸ்வீட்... உன்னை மாதிரியே... நான், சிவா, அக்கா, நாங்க மூணு பேரும் தான் அவங்களுக்கு எல்லாம். நாங்க தான் அவங்க உலகம். எங்க சந்தோஷத்துக்காக அவங்க என்ன வேணா செய்வாங்க. அவங்களுக்குன்னு தனிப்பட்ட விருப்பு வெறுப்பே கிடையாது. எங்களை சார்ந்தே தான் இருந்தாங்க. அவங்க பேச்சு கூட, என்னையும், சிவாவையும், எங்க அக்காவையும் பத்தி மட்டும் தான் இருக்கும். அவங்க எங்களைப் பத்தியே தான் நினைச்சுகிட்டு இருப்பாங்க"
"உங்களுக்கு உங்க அம்மாவை ரொம்ப பிடிக்குமா?"
"ரொம்ப ரொம்ப... ஆனா எப்பவும் அவங்களை தொல்லை பண்ணிக்கிட்டே இருப்பேன்"
"ஏன்?"
"அவங்களை என் கூடவே இருக்க வைக்கிறதுக்காக. ஏதாவது சாக்கு சொல்லி அவங்க கூடவே இருப்பேன்... சுவத்துல இடிச்சிகிட்டேன், தலைவலி, வயித்து வலி, அப்படி ஏதாவது..."
"அதெல்லாம் உண்மையா?"
"சான்சே இல்ல" வாய்விட்டு சிரித்தான் ருத்ரன்.
"அவங்க கூட இருக்கணும்னா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?"
"ரொம்ப..."
"நீங்க அவங்களை ரொம்ப மிஸ் பண்றீங்க இல்ல?"
"நீ என் வாழ்க்கையில வர்ற வரைக்கும் நான் அவங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்"
"நான் அவங்களை மறக்க வச்சிட்டேனா?"
"இல்ல... அதிகமா நினைக்க வச்சிருக்க... உன்னோட செயலால..." சற்றே நிறுத்தியவன்,
"மாயா இறந்த போது நான் அவளுக்காக ரொம்ப வருத்தப்பட்டேன்"
அன்பாய் அவள் தலையை வருடினான்.
"ஆனா, அவ எனக்காக பிறந்தவ இல்ல. அவளோட காதல் ரொம்ப உண்மையானது. அவ என் மடியில உயிரரை விட்டபோது அதை நான் உணர்ந்தேன். ஆனா, அவ உயிரோட இருந்திருந்தா கூட, நான் அவ கூட சந்தோஷமா இருந்திருப்பேனான்னு எனக்கு தெரியல. ஆனா, கடைசி நேரத்துல அவ உன்னை பத்தி சொன்ன வார்த்தைகளுக்காக நான் அவளுக்கு ரொம்ப கடமைப்பட்டு இருக்கேன். அவ சொன்னது குறிப்பா உன்னைப்பத்தி இல்லனாலும், அது தான் உன்னை கண்டுபிடிக்க எனக்கு உதவியா இருந்துச்சு"
YOU ARE READING
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )
Romanceஉச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந...