47 ருத்ரனுக்கு வலை...
இதற்கிடையில்,
"எனக்கு ருத்ரனையும் சக்தியையும் நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றாள் துர்கா.
"ஆமாம். ருத்ரன் கிட்ட நிறைய மாற்றம் தெரியுது" என்றார் பாட்டி.
"ஆமாம் அத்தை. அவன் நடந்துக்கிறதை எல்லாம் பார்க்கும் போது, அவன் பழையபடி மாறிட்டான்னு எனக்கு தோணுது" என்றார் அபிராமி.
"சக்தியோட வார்த்தைக்கு அவன் எப்படி கட்டுப்பட்டான்னு பாத்தீங்களா? உண்மையிலேயே அவன் அவளை ரொம்ப காதலிக்கிறான்னு தெரியுது" சிலாகித்தாள் துர்கா.
"கடவுளுக்கு ரொம்ப நன்றி. ருத்ரனோட மனசை புரிஞ்சி நடந்துக்கிற ஒரு மனைவி அவனுக்கு கிடைச்சுட்டா. எனக்கு அதுவே போதும். நான் நிம்மதியா கண்ணை மூடுவேன்" என்றார் பாட்டி.
"சக்தி, தக்ஷிணாமூர்த்தியோட பொண்ணுன்னு என்னால நம்பவே முடியல" என்றான் பரமேஸ்வரன்.
"நீங்க அவரைப் பத்தி பேசாதீங்க மாப்பிள்ளை. எப்படி அவர் நம்ம ருத்ரனை விட்டுட்டு வந்துர சொல்லி சக்தி கிட்ட சொல்லலாம்? அவர் யார் அதை சொல்றதுக்கு?" சீறினார் அபிராமி.
"நான் ஒத்துக்கிறேன், அவர் அப்படி சொல்லி இருக்கக் கூடாது. அவர் சொன்னது தப்பு தான். ஆனா, அவரு சக்தியோட அப்பா இல்லையா...?"
"ஓ அப்படியா...? இத்தனை நாளா அவர் எங்க போயிருந்தாரு?" என்றாள் துர்கா.
"அவர் ஏன் அப்படி பேசினார்னு எனக்கு தெரியல. ஆனா அவரு ரொம்ப மன அழுத்தத்துல இருக்காரு. மாயாவை இழந்த வருத்தம், அவரை விட்டு இன்னும் போகல. அவ மேல அவர் எவ்வளவு பாசம் வச்சிருந்தாருன்னு நமக்கு தெரியாதா? மாயா மாதிரியே இருக்கிற சக்தியை பார்த்த உடனே, அவரோட புத்தி பேதலிச்சு போச்சுன்னு நினைக்கிறேன்"
"நீங்க அவருடைய இடத்தில இருந்து பார்த்து மட்டும் இந்த விஷயத்தை பேசாதீங்க மாப்பிள்ளை. நம்ம ருத்ரனை பத்தி யோசிச்சு பாருங்க" என்றார் அபிராமி.
YOU ARE READING
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )
Romanceஉச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந...