தீர்ப்பு ⚖️
பகுதி -2சொல்லட்டுமா..!?
என்ற முல்லை💞யின் குரல்... கதிரை 10 வருடங்களுக்கு பின் தள்ளியது..➖➖➖➖➖➖➖➖➖
நீதிமன்றம்,
வருடம் - 2014.அந்த கோர்ட் முழுக்க சலசலப்பு...
அனைவரையும் அமைதிப்படுத்த ஜட்ஜ் ஆடர் ஆடர் என்று சொல்ல.. கோர்ட் முழுக்க ஒரு மயான அமைதிக்கு சென்றது...மூடியிருந்த கண்ணாடி டம்பளரில் இருந்த தண்ணீரை குடித்துவிட்டு கீழே வைத்தவர்...
நிமிர்ந்து பார்த்து,
வாதி..யை இப்போது குறுக்கு விசாரணை செய்யலாம் என்று சொல்ல...கருப்பு அங்கியில் கம்பீரமாக எழுந்து, நீதிபதிக்கு முன், லேசாக தலை சாய்த்தவாறு மரியாதை தெரிவித்து... கூண்டில் நிற்கும் பெண்ணுக்கு அருகே வந்து நின்றாள் முல்லை💞...
உங்கள் பெயர்?
கவிதா..
கொஞ்சம் சத்தமா பேசுங்க..
ஜட்ஜ் காதுல விழணும்..கவி....தா..!!
Good.
வயது?
22.
( அவளிடம் லேசாக விசும்பல் சத்தம் கேட்க...)இங்க பாருங்க கவிதா.. உண்மைய பேசுறதுக்கு எதுக்கு தயக்கம்..? தயங்காம பதில் சொன்னா தான் நியாயம் கிடைக்கும்... எதுக்கு? இப்படி அழறீங்க..
எனக்கு அழுகை வருது...
சரி.. நல்லா அழுதுட்டு தெளிவா சத்தமா பதில் சொல்லுங்க..
நீங்க என்ன பண்றிங்க.?
(கண்ணீரை துடைத்தவள்...)
Graduation முடிச்சிட்டு Birds பத்தின Research Course பண்ணிட்டு இருக்கேன்.. அது சம்மந்தப்பட்ட Seminar ல.. கலந்துக்க சென்னைக்கு வந்தேன்..