தீர்ப்பு⚖️
பகுதி - 4
நீதிபதி தீர்ப்பை வாசிக்க தொடங்கியதும், அனைவரின் முகத்திலும் சிறு கலவரம் வந்து ஒட்டிக்கொண்டது..
நடந்து முடிந்த சாட்சிகள் மற்றும் விசாரணையின் அடிப்படையிலும், இந்திய சட்டத்தின் பிரிவுகளின் அடிப்படையிலும் கவனிக்கும் பொழுது..
இந்திய சட்டம் 375 பிரிவின் கீழ் விவரிக்கப்பட்டுள்ள கற்பழிப்பு மற்றும் பலாத்காரம் போன்ற குற்றத்தை திரு.விக்ரம் செய்தார் என்று நிரூபிக்கப்படவில்லை என்று இந்த கோர்ட் கருதுகிறது...
விக்ரம் அறையில் சாவித் துவாரத்தின் வழியே பார்த்ததாக சந்தேகப்பட்ட கவிதா.. அதன்பின் அவருடன் காபி அருந்த சென்று இருக்கிறார் என்பதிலேயே... கவிதாவின் குற்றச்சாட்டு பலவீனம் ஆகிறது..
லிஃப்டிலும் விக்ரம் கண்ணியமானவராகவே நடந்து கொண்டிருக்கிறார்.. உறவே வைத்துக் கொள்ளவில்லை என்று சொல்லி அவர் அடம் பிடிக்கவில்லை.. மருத்துவ பரிசோதனை அறிக்கைக்கு எதிராக மாற்றாக அவர் எந்த கருத்தும் சொல்லவில்லை..
கவிதாவே தானாக முன்வந்து அவள் சுய நினைவுடன், விருப்பத்துடன் தான் விக்ரமுடன் உறவு வைத்துக் கொண்டார் என்று விசாரணை அடிப்படையில் இந்த கோர்ட் தீர்மானிக்கிறது.. எனவே இந்திய தண்டனை சட்டம் Section 376 கீழ் உள்ள தண்டனைகளில் அவரை உட்படுத்த முடியாது என்றும் அவர் குற்றம் அற்றவர் என்றும் இந்த கோர்ட் கருதி.. அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கிறது..
கவிதா படித்த பெண்ணாக இருந்தும் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி விக்ரமின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்ததை இந்த கோர்ட் கடுமையாக எச்சரிக்கையுடன் கண்டிக்கிறது ...