தீர்ப்பு ⚖️
பகுதி - 11
சென்ட்ரல் ஸ்டேஷன் பைக் பார்க்கிங் கில் டோக்கன் கொடுக்கும் ஒருவன் தான் முதலில் போலீசுக்கு தகவல் சொன்னான்..
மூன்று நாட்களாக ஒரு கார் பார்க்கிங் கில் குறுக்காக நிறுத்தப்பட்டு.. யாரும் வந்து எடுத்துப் போகாம அந்த இடத்தை அடைச்சு நின்னுட்டு இருக்கு Sir என்று..
போலீஸ் அந்த இடத்திற்கு சென்று விசாரித்தத்தில் அது வாடகை கார் என்று அறிந்ததும்... அந்த ட்ராவல்ஸ் கம்பெனியை அணுகியது..
அந்த காரை நான்கு நாட்களுக்கு முன்பு, ராம் என்ற ஒருவர் வாடகைக்கு எடுத்துச் சென்றதாக அந்த கம்பெனி தகவல் தந்தது..
அடுத்த நிமிடம், ராம் வீட்டின் சோபாவில் கதிர் அமந்திருந்தான்...
ராம் திணறிய படி...
ஆமா அந்த காரை நான் தான் வாடகைக்கு எடுத்தேன்.. ஆனா நான் எடுத்துட்டு போகல.. என் ஃபிரண்ட் தான் எடுத்துட்டு போனான்....உங்க ஃபிரண்ட் பேரு என்ன..??
சொல்லலாமா.? வேண்டாமா.? என்று யோசித்துவிட்டு பின் வேறு வழி இல்லை என்று தீர்மானத்துக்கு வந்தவன் விக்ரம் என்றான்..
விக்ரமா..!?
அவருக்கு எதுக்கு வாடகைக்கு கார்.. அவர்கிட்ட தான் 2 கார் இருக்கே அப்புறம் எதுக்கு வாடகைக்கு எடுக்கணும்..
இல்..ல... அது வந்து, ஒரு வண்டியை சர்வீஸ் விட்டு இருந்தான்.. இன்னொரு வண்டிய சதீஷ் பிசினஸ் விஷயமா கோயம்பத்தூர் கொண்டு போய் இருக்கான்.
சதீஷ் எப்போ வருவாரு..!?
நாளைக்கு வந்துருவான் மீட்டிங் முடிச்சிட்டு..