தீர்ப்பு ⚖️
பகுதி - 10
முல்லைக்கு யோசிக்க யோசிக்க தலை சுற்றியது...
போலீசுக்கு தகவல் சொன்னால் அவங்களோட எத்தனை கேள்விக்கு நான் பதில் சொல்லியாகணும்..
கோர்ட்..ல என்னை மாதிரியோ..!! இல்ல, என்னை விட புத்திசாலியான வக்கீல் கிட்ட மாட்டினா அவங்க குறுக்கு விசாரணை எப்படி?இருக்கும்..
அவன் கூட ஏன் போனே..?
அவ்வளவு தூரம் தனியா போக எப்படி உனக்கு தைரியம் வந்துச்சு .?
கற்பழிப்பை பத்தி போலீஸ் கிட்ட சொல்லாம.. நீயே ஏன் அவனை கத்தியால் குத்தினே ..?
உன்னைக் கொலை பண்ண முயற்சி செய்யும் போது தற்காப்புக்காக கொலை செய்ததா இது தெரியலையே..!!
ஒரு மனிதாபி மானத்தோடு தவித்த வாய்க்கு தண்ணீர் தரத்தானே விக்ரம் சமையலறைக்கு சென்றார்..
கற்பழிப்பு நடந்ததாக சொல்லப்படும் அறையில் எந்த கத்தியும் இல்லையே.. சமையலறையில் தானே இருந்தது..
சமையலறைக்கு அவனைப் போக வைத்து.. கத்தியை எடுத்து அவனை குத்தியதில் ஏதோ ஒரு திட்டமிடல் தெரிகிறதே..
இது உணர்ச்சி வேகத்தில் செய்த கொலை மாதிரி தெரியவில்லையே.. ஆத்திரத்தோடு திட்டமிட்டு கொலை செய்ததாகவே தெரிகிறது..
எனவே இ.பி.கோ Section 120 ன் படி..
முல்லை வேகமாக தலையை உலுக்கி கொண்டாள்...
வேண்டாம்..
வேண்டாம்... நான் குற்றவாளியாக கோர்ட் படி ஏறப் போவது இல்லை... நான் விக்ரம் கூட இங்க வந்தது என்னைத் தவிர வேற யாருக்கும் தெரியாது..