தீர்ப்பு - 12

124 15 9
                                    

தீர்ப்பு ⚖️

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

தீர்ப்பு ⚖️

பகுதி - 12

         கதிர்,  ஃபோனில் அதிகாரியிடம் கேசை பற்றி விவாதித்து ரிசீவரை கீழே வைத்தவன்.. ஸ்டேஷனில் இருந்த ஒருவருக்கு கட்டளைகளை பிறப்பித்து விட்டு, Cap எடுத்து தலையில் அணிந்து கொண்டு வெளியே கிளம்ப, ஸ்டேஷன் வாசலில்  நின்றிருந்த ஜீப் அருகில் வந்து அதில் ஏற முற்பட்ட போது.. எதிரே முல்லை சேலையில் நடந்து வந்து கொண்டிருந்தாள்..

ஜீப்..பில் ஏற எத்தனித்தவன்.. அவளை பார்த்ததும் இதழ் மலர்ந்தவன் இறங்கி, அவள் நெருங்கி வரும் வரை அதே இடத்தில் நின்றிருந்தான்..

எங்கேயோ பார்த்தவாறு.. ஏதோ யோசனையில் நடந்தவள் எதிரே கதிர் நிற்பதை பார்த்ததும்.. சட்டென அவள் இதயத்தை அழுத்தி கொண்டிருந்த துக்கம் தொண்டையை அடைக்க.. ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டு சத்தமாக அழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு..

அதே நேரத்தில் கண்களில் கண்ணீர் கோர்க்க... அவசரமாக இமைகளை பட படத்தவள் கண்ணீரை அவன் பார்க்கா வண்ணம் மறைத்து சிரிப்பை வலுக்கட்டாயமாக முகத்தில் அணிந்து கொண்டு.. அவன் அருகில் வந்தாள்..

Hi..!! முல்ல💞..
என்னங்க இந்த பக்கம்..
அதுவும் நடந்து போறீங்க..

ஆசிரமத்துக்கு போய்ட்டு வந்துட்டு இருக்கேன் கதிர்.. அங்கேயே ஆட்டோ எதிர்பார்த்து டைம் ஆகிடுச்சு.. அதான் மெயின் ரோட்ல போய் ஆட்டோ  ஏறிக்கலாம்னு நடந்து போறேன்..

உங்க ஸ்கூட்டி..க்கு என்னாச்சு....

சர்வீஸ் கொடுத்து இருக்கேன், வண்டியில நிறைய கம்பளைண்ட் இருக்கு.. நாளைக்கு ஈவினிங் கொடுக்குறதா சொல்லி இருக்காங்க..

தீர்ப்பு ⚖️Where stories live. Discover now