தீர்ப்பு ⚖️
பகுதி -5
Cheer's என்று கண்ணாடி கோப்பைகள் மூன்றும் முத்தமிட்டு கொண்டன....
விக்ரம், அவனின் நண்பர்கள் ராம், சுரேஷ்... மூவரும் முதல் சிப்பை உறிஞ்சினார்கள்..
டேய்... எங்கடா பிடிச்ச..
அந்த முல்லை💞ய... இந்த விலாசு விலாசுறா..என்றான் சுரேஷ்..Advocate வேணுகோபால தெரியுமா..!??
ஆமா.. சொல்லு
அவரோட ஜூனியர் தான் இந்த முல்ல💞..
Advocate வேணுகோபாலும் என்னோட மாமாவும் ஸ்கூல் ஃபிரண்ட்ஸ் டா..
விஷயத்தை மாமா கிட்ட சொன்னதும்.. வேணுகோபால் sir கிட்ட பேசி இருக்காரு....அவருக்கு ஏதோ மெடிக்கல் ப்ராப்ளம் இருக்கும் போல.. ஆபரேஷன் க்கு.. ஃபாரின் போய் இருக்காரு.. திரும்பி வர்ற 2 மாசம் ஆகும்னு அவர் தான்..
முல்லை💞ய பத்தி சொன்னாரு..இப்போ தனியா Practice பண்ண ஆரம்பிச்சு இருக்கா.. நல்ல புத்திசாலினு Certificate கொடுத்தாரு.. எனக்கு ஆரம்பத்துல அந்தளவுக்கு நம்பிக்கை இல்ல doubt ல தான் இருந்தேன்... ஆனா அந்த
முல்ல💞 வேற லெவல்ல அதகளம் பண்ணிட்டா..டா..ராம்,
எப்டி டா.. அந்த கவிதாவ கோர்ட் வரைக்கும் போக விட்டே.. இந்த மாதிரி எப்பவும் careless ah இருக்க மாட்டியே..!?அ..து..
அவளோட innocent ல ஏமாந்து போய்ட்டேன் டா...ஏன்? டா கோர்ட் வரைக்கும் போய் இருக்கா.. Innocent nu சொல்ற..
என்ன தான் படிச்சு இருந்தாலும் அவகிட்ட ஒரு குழந்தை தனம் இருந்துச்சுடா.. அது தான் எனக்கு அவ மேல ஈர்ப்பு வர காரணமா இருந்துச்சு... அந்த Innocent பாத்து ஏமாந்து தான் கோர்ட்டுக்கு எல்லாம் போக மாட்டானு நினைச்சிட்டேன்..