தீர்ப்பு ⚖️
பகுதி - 14
விழிகளில் லேசான நீர் பனிக்க.. கதிர் எழுந்து கொண்டான்.. CD பிளேயரிலிருந்து CD யை வெளியே எடுத்து ஒரு கவரில் போட்டுக் கொண்டான்..
உள் அறைக்கு சென்று பழைய பெட்டி ஒன்றை ஆராய்ந்தான்.. அதில் ஒரு பழைய டைரி ஒன்றிற்கு இடையில் இருந்த அந்த வெள்ளைக் கவரை எடுத்துக் கொண்டான்.
முல்லையை இப்போதே அவனுக்கு பார்க்க வேண்டும் போல் இருந்தது... வேகமாக வேறு உடைக்கு மாறினான்.. அதே வேகத்தில் காரின் சாவியை தேடி எடுத்தவன் வாசலுக்கு விரைந்து காரில் ஏறினான்..
காலில் கட்டு போட்டு கொண்டு காரை இயக்க சற்று சிரமமாகவே இருந்தது..
எனினும் காயத்தை பொருட்படுத்தாமல், அதே வேகத்தில் காரை இயக்கி முல்லை வீட்டிற்கு வந்தவன்..அவள் வீட்டின் கதவில் பூட்டு தொங்கி கொண்டிருப்பதை பார்த்து.. சற்று யோசித்து அந்த ஆசிரமத்திற்கு விரைந்தான்..
கதிர் காரை அந்த வேப்ப மரத்தின் நிழலில் நிறுத்திவிட்டு இறங்கி... லேசாக கால்களை தாங்கி நடந்து உள்ளே சென்றான்..
உள்ளே அந்த பெரிய விஸ்தாரமான ஹாலில் ஆசிரம குழந்தைகளை வரிசையாக அமர வைத்து அனைவருக்கும் சாதம் பரிமாறி கொண்டிருந்தாள் முல்லை ..
அருகே குழம்பு, பொரியல், கூட்டு, பாயசம், வடை, என ஒவ்வொரு பணியாளரும் பரிமாறி கொண்டிருக்க..
முல்லை💞 குழந்தைகள் அனைவரும் சாப்பிடுவதை பார்த்து அகம் மகிழ்ந்தவள்.. எதேச்சையாக திரும்ப.. வாசலில் கதிர் நின்றிருப்பதை பார்த்தாள்..