தீர்ப்பு ⚖️
பகுதி -7
ஒரு மாதம் கழித்து...
முல்லை கோர்ட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தாள்... தன் bag எடுத்து தோளில் மாட்ட.. அதிலிருந்த ஃபோன் சிணுங்க.. திறந்து ஃபோனை எடுத்தாள்..
சொல்லுங்க விக்ரம்..
எப்டி இருக்கீங்க முல்ல..
நல்லா இருக்கேங்க..
நீங்க..?Hmm.. சூப்பர்..ங்க..
என்ன திடீர்னு காலையில கூப்பிட்டு இருக்கீங்க..
இல்ல
அது..ஹ்ம்ம் சொல்லுங்க..
உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் முல்ல..
என்ன விஷயம்...?
Treat க்கு தான் நீங்க வரல.. அட்லீஸ்ட் நாங்க Friends எல்லாரும் சேர்ந்து புதுசா ஒரு பிசினஸ் start பண்ண போறோம்.. அதுல பாட்னரா நீங்க கண்டிப்பா சேரணும்...
அச்சோ பாட்னரா.. வா..!?
என்ன? சொல்றீங்...க..
நா..ன் எப்படி?ஆமாம் முல்ல.. நாங்க Friends மூணு பேரும் சேர்ந்து ஒரு கிரானைட் பேக்டரி ஆரம்பிக்க போறோம்.. அந்த பிசினஸ்க்கு நாலு பார்ட்னர்.. நான் என்னுடைய 2 Friends அப்புறம் நீங்க..
ஐயயோ பாட்னர் ஆகணும்னா.. காசு வேண்டாமா...!? என்கிட்ட பணமெல்லாம் கிடையாது..
யாரு உங்க கிட்ட பணம் கேட்டது..? உங்க புத்திசாலித்தனம் போதாதா..!!? அதுக்கு முன்னாடி இந்த பணமெல்லாம் பெரிய விஷயமே இல்ல...
முழுப் பணமும் நான் தான் போட போறேன், என்னோட Friends ரெண்டு பேரும் பிசினஸ்ஸ பாத்துப்பாங்க.. ஏற்றுமதி, இறக்குமதி, லீகல் அந்த மாதிரி பிரச்சனைக்கு எல்லாம் ஒரு advocate எங்க கூட அதுவும் பாட்னரா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு நினைக்கிறோம்.. வயசானவங்களா இருந்தா துடிப்பா வேலை செய்ய மாட்டாங்க, திறமையாக இருக்க மாட்டாங்க.. ஆனா நீங்களா இருந்தீங்க..னா எனக்கு ரொம்பவும் சப்போர்ட்டிவா இருக்கும்.. அதனால்தான் நீங்க பாட்னரா இருந்தா நல்லா இருக்கும்னு.. ப்ளீஸ் தயவு செய்து மறுக்காதீங்க..