🧚🏼❤️
அது ஒரு அழகான கிராமம். அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் நகர சௌகரியங்கள் பற்றி அறியாதவர்கள். கல்வியிலும் அவ்வளவு முன்னேற்றங்கள் இல்லை. ஏதோ நாள் கூலி வேலை செய்து குடும்பத்தை பராமரிக்கும் குடும்பத் தலைவர்கள்...
இப்படி இருக்கும் அந்த ஊரில் சங்கீதா எனும் பேரளகி வசித்து வந்தாள். அவளுக்கு ஒரு அண்ணா மட்டுமே. தந்தை இவள் சிறு வயதாக இருக்கும்போதே தவறிவிட்டார்.
தற்போது வீட்டில் இவளும் அம்மாவும், அண்ணாவும் மட்டுமே.
குடும்பப் பொறுப்புகளை அம்மா சுமக்க, அண்ணா விவசாயம் செய்து அம்மாவின் குடும்பம் பாரத்தை குறைக்க உதவி செய்வான்.
சங்கீதா இறுதி வருட படிப்பை படித்துக் கொண்டிருந்தாள்.
இவள் பாடசாலை விட்டு வரும் போது அம்மாவும், அண்ணாவும் வீட்டில் இருக்க மாட்டார்கள். அவள் தனியாக இருந்து வீட்டு வேலைகளை முடித்து, பாடங்களை மீட்டுவாள்.
இவ்வாறு இருக்க, ஒரு நாள் அவள் வீட்டருகே ஒரு சிவப்பு கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து ஓர் வாலிபன் இறங்கி,
பக்கத்தில் இருக்கும் ஊருக்கு செல்ல வழி கேட்டுக் கொண்டு இருந்தான்.
அச்சமயம் சங்கீதா வீட்டுக்கு வெளியே குழந்தை தனமாக, தனியாக மண் மீது கோலம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தாள்.
இவளின் மழலை தனம் அவ்வாலிபன் கண்களில் பட்டது. காரில் ஏறி, சற்று அவளை ரசித்துக் கொண்டு இருந்தான் . அவளோ தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
"இச்சிறு கிராமத்தில் இப்படி ஒரு பேரளகியா " என தனக்குள் நினைத்துக் கொண்டான். தூரத்தில் இருந்து ரசித்தது போதும் என நினைத்து அவளின் அருகே சென்றான்.
அவள் இவனைக் கண்டதும் விளையாட்டை நிறுத்தி, வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள் . அவன் அருகே சென்று " கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா " என கேட்க...
இவள் " வீட்டில் யாரும் இல்லை " என குரல் கொடுத்தாள்." தண்ணீர் கொடுக்க குடும்பம் வேண்டுமா " என நக்கலாக கேட்டான்.
சிறிய புன்னகையோடு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
அவன் உடனே " உன் பெயர் என்ன " என்று கதைக்க ஆரம்பித்தான் .
இவள் " வீட்டில் யாரும் இல்லை . தெரியாத நபர்களிடம் நான் கதைப்பதில்லை" என்று கூறி வீட்டுக்குள் சென்றாள்.
அவனும் சற்று ஏமாற்றதுடன் அங்கிருந்து கிளம்பிச் செல்லும் போது, இவள் யன்னல் வழியாக இவனை எட்டிப் பார்த்தாள்.
இவளுக்கும் ஒரு நகர அமைப்பில் வந்த ஒருவனை எப்படி பார்க்காமல் இருக்க முடியும்??🙈................Next episode will update soon....
Stay tuned❤