Episode 03

18 1 0
                                    

பாடசாலையில் இருந்து திரும்பும் போது, நேற்று இருந்த அதே சிவப்பு கார் நிற்பதை கொண்டாள் சங்கீதா.

"ஆனால் நேற்று ஏமாந்து விட்டோம்" என்று இன்றும் வேறு யாரோ ஒருவர் தான் வந்து இருக்கக் கூடும் என தன் பாட்டில் நடையை தொடர்ந்தாள்.

கார் பக்கமாக செல்லும் போது தான் அவளுக்கு தெரிகிறது வந்து இருப்பது அந்த வாலிபன் என்று....😍
மனதிற்குள் பட்டாம்பூச்சி பறப்பதை உணர்ந்தாள்.
அவனும் இவள் வருவதை கண்டு முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது.

இவளின் நண்பர்கள் இவளைப் பார்த்து " ஹேய்.. அவன் உன்ன தான் டி பார்க்குறான்" என இவளை மேலும் குஷி ஆக்கவே , அவளும் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

இவர்கள் முன்னால் செல்ல, அவன் பின்னால் வந்தான். இதைக் கண்ட சங்கீதாவுக்கு மனதில் பயத்துடன், பதற்றமாகிற்று.

அந்த ஊரில் இதெல்லாம் ஆச்சரியமாக பார்க்கும் மக்கள் கண்களில் பட்டால் பிரச்சனை ஆகி விடும் என பயந்து,
பின்னால் திரும்பி " எதுக்காக நம்ம பின்னாடி வர்ரீங்க...? " எனக்கேட்க..

அவன் " கொஞ்சம் பேச வேண்டும் உங்க கூட" என சொல்ல,
இவள் " அதெல்லாம் முடியாது.யாராவது பார்த்தா பிரச்சனை ஆகிடும். முதல்ல நம்ம பின்னாடி வர வேண்டாம் " என்று வேகமாகப் படபடத்து பேசி விட்டு சென்றாள்.
வீட்டை வந்து சேர்ந்தாள் அவள்.

மனதிற்குள் பேச ஆசை இருந்தும், பயம் அவளை தடுத்தது. வழமைப் போல் வீட்டு வேலைகளை முடித்து, படிப்பதற்காக பாடசாலையில் பையை திறந்து புத்தகங்களை வெளியே எடுத்தாள். எடுக்கும் போது ஏதோ காகிதம் ஒன்று விழுந்தது.
( பின்னாடி இவளை தொடரும் போது அவன் பையில் செறுகி விட்டான்)

என்னவாக இருக்கும் என்று எடுத்துப் பார்த்தாள்.

அதில் ....

" என் பெயர் அம்ரிஷ். நான் ஒரு ரிப்போர்ட்டர். உங்க ஊருக்கு ஒரு வேலை விசயமாக வந்தேன். அந்த சமயம் தான் நான் உங்கள கண்டேன் . கண்டவுடனே என் மனதில் நீ தான் எதிர் காலம் என்று நினைத்தேன். ஏன் அப்படி தோனுச்சி ணு தெரியல்ல. அன்றிலிருந்து நான் மூன்று நாட்களாக பின் தொடர்ந்து வருகிறேன். நேற்றும் நான் வந்து உன்னை பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். காரில் என் நண்பன் இருப்பதைக் கண்டு நீ ஏமாற்றதுடன் போவதையும் கண்டேன்.
நாளை நான் மீண்டும் வருவேன் உன் பதிலை எதிர் பார்த்து..
தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

இப்படிக்கு அம்ரிஷ்."

இதைப் படித்ததும் இவளுக்கோ மனதில் சந்தோஷம். ஆனால் குடும்ப நிலையும், ஊர் மக்கள் அம்மாவை ஏதும் சொல்லி விடுவார்களோ என்று சற்று சிந்தித்தாள்.

பதிலுக்கு அவள் ஒரு கடிதம் எழுதினாள். அதில்.....

" நீங்கள் என்னை தப்பாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். நான் உங்களை வரவை ஒன்றும் எதிர் பார்க்கவில்லை. இனி என் பின்னால் வருவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். " என எழுதி அடுத்த நாள் பாடசாலை விட்டு வரும் போது கொடுத்தாள்.

இவள் அவனுக்கு இக்கடிதத்தை கொடுப்பதை ஊரில் இருக்கும் ஒருவர் கண்டு விட்டார்.

கண்டதை அவளின் அண்ணாவுக்கு கூற, வேலை முடித்து நவீன் கோபத்துடன் வீட்டுக்கு வந்தான்.
வந்ததும் இவள் கண்ணத்தில் ஓங்கி அறைந்தான்.

அம்மா: ஏன்டா அவள அடிக்குற? என்ன உனக்கு ... காரணம் இல்லாம அடிக்குற.....

அதற்கு நவீன்: அவ கிட்டயே கேளுங்க. என்ன காரியம் செஞ்சிட்டு வந்தா ணு....

அம்மா: என்னடி .... என்னடி பன்ன....

சங்கீதா: தெரியல்ல ம்மா.. எனக்கும் ஒன்னும் புரியல்ல..

நவீன்: ஆமா.. எதுவுமே தெரியாம தான் லவ் லட்டர் கொடுத்தியா..?

சங்கீதா இதை எப்படி சொல்லி புரிய வைப்பேன் என்று திகைத்து நின்றாள்.

அம்மா: என்னடா சொல்ற. இவளா அப்படி ஒரு காரியத்த பன்னாள்? என்னடி ... அவன் சொல்றது உண்மையா????

சங்கீதா: இல்லாம்மா ...... அது வந்து.....

நவீன்: அப்போ நான் பொய் சொல்றனா???

அம்மா : என்ன சங்கீதா... இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஆகுமா... நான் பட்ற கஷ்டத்த எல்லாம் நீ ஒருத்தி கெடுத்து போடுவ போல . தனி ஆளா நான் உங்க ரெண்டு பேரயும் வளத்து ஆளாக்க பட்ற கஷ்டம் எனக்கு தான் தெரியும்.

இப்படி அம்மாவும், அண்ணாவும் கத்த,
மௌனமாக இருந்தாள் அவள். 😔😔😒

.
.
.
.
.

மறு நாள் பாடசாலை சென்று வரும் போது கூட அவன் அவளுக்காக காத்திருந்தான்...

அப்போது அவள் .....................


Stay tuned for next episode ❤







அவனை நினைத்து....Avanai Ninaiththu...Kde žijí příběhy. Začni objevovat