மறு நாள் பாடசாலை சென்று வரும் போது கூட அவன் அவளுக்காக காத்திருந்தான்.
சங்கீதா மனதில் அவன் மீது இஷ்டம் இருந்தாலும், குடும்பத்திற்காக மனதை கல்லாக்கிக் கொண்டாள். தன்னால் அம்மாவுக்கு கெட்ட பெயர் வரக் கூடாது என்று எண்ணி...
சங்கீதா அவளின் ஒரு நண்பியை அனுப்பி அவனிடம் " என் வீட்டில் நீங்கள் என் பின் வருவதை தெரிந்து பிரச்சனை ஆகிற்று. இனி தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள் " என கூறும் படி தூது அனுப்பினாள்.
அவளும் அவனிடம் அதை சொல்ல....
அவன் அங்கிருந்து எதுவும் பேசாமல் கிளம்பினான்.
சங்கீதா மனதில் "எதுவும் பேசாமல் போகிறான். இனி அவன் வரப் போவதில்லை. எல்லாம் வெறும் கண்டவுடன் காதல் தான்....நான் தான் தேவை இல்லாமல் ஆசை வளர்த்துக் கொண்டேன் போல " என்று தனக்கு தானே கூறிக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
வழமைப் போல் மாலையில் அம்மாவும், நவீனும் வீட்டுக்கு வந்தார்கள்.
சங்கீதா அவளின் பரீட்சை வேலைகளை செய்துக் கொண்டு இருந்தாள்.
வழமைப் போல் இல்லாமல் வீடே அமைதியாக இருந்தது.அம்மா சிறிது நேரம் பார்த்தாள்.
இவர்கள் இருவரும் மௌனமாக இருப்பதை கண்டு...அம்மா : என்ன.... ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சன? நேத்து நடந்தது அப்பவே முடிஞ்சி போச்சி. இன்னும் அத மனசுல வச்சி பேசாம இருந்தா எப்படி.......... வீட்டுல தான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கலாம் னு பாத்தா இப்படி இருக்கு.....
அம்மாவின் பேச்சைக் கேட்டு சங்கீதா சங்கடப்பட்டாள். வழமைப் போல் அண்ணாவுடன் பேசினாள். நவீனும் இவளின் முகத்தைப் பார்த்து புன்னகைக்க .... மீண்டும் வீடு கலகலவென மாறியது .
அம்மாவும் இவர்களைக் கண்டு மகிழ்ந்தார் .அம்மா இரவு உணவை சமைக்க சென்றாள். நவீனும் சங்கீதா அவர்களது வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள் .
இப்படி இருக்க...
கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே நவீன் கதவை திறந்தார்.சங்கீதா வியந்து நின்றாள்.
அம்மா: யாரு நவீன்...........🗣🗣
Stay tuned for next episode❤
Thank u so much cuties for your comments🧚♀️keep touch with us