3 - முதல் பாடம்

249 16 4
                                    

               என்னடா முதல் பாடம் என்று தலைப்பு வைத்து இருக்கிறேன், அதனால நான் பாடம் நடத்த போறேன் என்றும் கல்லூரில நடந்த பாடம் பற்றி சொல்ல போகிறேன் என்றும் என்ன வேண்டாம். கல்லூரியில் இருக்கும் போது எனது நண்பர்களுடன் அரட்டை அடிப்பது உண்டு. எனக்கு என்று சில நெருங்கிய நண்பர்கள் 3 பேர் உள்ளனர். அவர்களுடன் நன்றாக அரட்டை மற்றும் ஊர் சுற்றி பின்னர் அவர்கள் உடனே தங்கினேன், முதலாம் ஆண்டு வரை. எப்படி ஒரு வருடம் போனது என்று தெரியவில்லை..

               நான் சிட்டி வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது. அவர்களுடன் தினம் தினம் நன்றாக ஊர் சுற்றி இரவு 11 மணிக்கு மேல் தான் ரூமுக்குள் வந்து துங்குவது. இரண்டு செமஸ்டர் வெற்றிகரமாக முடித்து மூன்றாவது செமஸ்டர்யில் படித்து கொண்டு இருக்கும் போது, எனது நண்பன் அருண் அவன் நன்றாக  பெண்களுடன் பேசுவான், அவன் கல்லூரியில் அவன் தோழி பற்றி சொல்லி வெறுப்பு ஏற்றுவான். அப்படி ஒரு நாள் பேசுகையில், அவன், அவனுடைய தோழி Mercy உடன் Dating போக போகி றேன் என்று சொல்லி கொண்டு என்னையும் எனது நண்பர்களையும் வெறுப்பேற்றி கொண்டிருந்தன். 

               நான் சரியாக பெண்களுடன் பேசமாட்டேன் கூச்ச சுபாவம் உள்ளவன். நான் அருணுக்கு மிகவும் நெருக்கம் என்பதால் அவன் வெளிபடையாக பேசுவான். அப்படி பேசுகையில், இன்னும் எவ்வளவு நாள் தான் ராம் இப்படி இருக்க போகிறாய், பெண்களுடன் Friendly பேசுறது தப்பு இல்ல என்று சொன்னான், நான் பாரு ஒரு பெண்ணை correct பண்ணி dating போறேன். இதலாம் இல்லாமல் சிட்டி லைப் வேஸ்ட் டா என்றான். அவன் இன்ஜினியரிங் சென்னையில் தான் படிச்சான் அதுனால அவனுக்கு dating எல்லாம் ஜஸ்ட் லைக் தட் மாதிரி.  

              இப்படி தினம் வந்து எனக்கு பாடம் நடத்துவான். கல்லுரியில் அவன் தோழி வரும் பொழுது மற்ற பசங்கள் எல்லாம் அருண் என்று கத்தி கூச்சல் போடுவார்கள். அருணின் தோழி ஒரு கிருஸ்துவ மதத்தை சார்ந்தவள், பெண்களுக்கு என்று ஒரு கெட்ட பழக்கம் உண்டு, அதாங்க அவங்க கூடவே மற்றும் ஒரு பெண் தோழியே கூடவே வைத்து கொண்டு சுற்றுவது. அதுபோல அருணின் தோழி மெர்சி, அவள் தோழியுடன் தான் இருப்பாள். அந்த கல்லூரியில் அவர்கள் இரண்டு பேரையும் இரட்டை பிறவிகள் என்று தான் அழைப்பார்கள்.  

              இவர்கள் இரண்டு பேருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு அந்த வகுப்பில், இவர்கள் செல்லும் இடம் எல்லாம் பசங்க கமெண்ட் பண்ணுவானுங்க. இதலாம் நான் எதோ புதுசு போல் பார்த்து கொண்டிருந்தேன். அருண் ஒரு நாள் அவன் தோழி mercy உடன் பழகி dating சென்ற அனுபவம் வரை சொல்லி மேற்கொண்டு அவன் அவளுடன் வேறு இடத்திருக்கு தனியாக Dating செல்ல திட்டமிட்டான். அப்போது தான் அவன் மிகவும் சகஜமாக என்னடா ராம் நான் மற்றும் Mercy, நீ மற்றும் Nancy நால்வரும்  வெளியில் dating போகலாமா என்று சாதாரணமாக கேட்டு என்னை திகில் அடைய செய்தான். நான்சி அவள் தான் மெர்சியின் உடன் பிறவா இரட்டை சகோதிரி என்று அனைவரும் அன்புடன் அழைப்பர். மெர்சி மற்றும் நான்சி இரண்டு பேரும் நல்ல தோழிகள். இருவரும் ஒரே மாவட்டம் சேர்ந்தவர். இருவரும் நெல்லை தமிழ் மற்றும் மலையாள தமிழ் பேசும் தோழிகள்.     



                     எனது கதையின் நாயகி பற்றி சொல்ல இரு வரி போதாது என்ற காரணத்தினால்,இந்த பகுதியில் தொடர முடியவில்லை. தயவு செய்து கொஞ்சம் அவகாசம் வேண்டும். அனைவரும் கதையின் நாயகி யார் என்று கணித்து இருப்பீர்கள். எனவே அடுத்த பகுதியில் விரைவில் சந்திகின்றேன். 


உள்ளுறும் உணர்வுகள்Where stories live. Discover now