10 - தள்ளி போகாதே

125 5 1
                                    


          நான்சி மூலம் சுதா அறிமுகம் கிடைத்த பின்னர் அவளுடன் நன்றாக பழகினேன், சுதா நான்சியை போன்று இல்லாமல் சற்று வெளிப்படையாக பேசும் சுபாவமுள்ளவள். எனவே அவளிடம் கிண்டலும் கேலிக்கும் என்றும் பஞ்சம் இருக்காது. நான்சி வழக்கம் போன்று எங்காவது அவ்வப்பொழுது செல்வதுண்டு. இதை பற்றி சுதாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றாவது ஒரு நாள் என்று மனதில் நினைத்து கொண்டு அவளிடம் ஒரு நாள் தி. நகர்க்கு ஷாப்பிங் சென்று விட்டு வந்து கொண்டு இருக்கையில், சுதா என்னை அவள் தங்கி இருக்கும் வீட்டிற்கு அழைத்தால். சுதா, நான்சி இரண்டு பேரும் ஒரே வீட்டில் தான் உள்ளனர். அவர்கள் திருவான்மியூர் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கையில், சுதா சகஜமாக என்னை அழைத்து சென்றால். நான் அவளுடன் சென்றேன். மெல்ல நடந்து அவளிடம் பேசி கொண்டு நடந்து அவர்கள் வீட்டின் அருகில் சென்றேன்.

          அவர்கள் வீட்டில் நெருங்கும் போது சற்று பயமும் சந்தோசம் ஏற்பட்டது. சுதாவுடன் வீட்டினுள் நுழைந்தவுடன், சுதா தனது தோழி நான்சியை அழைத்தால். நான்சி சர்வ சாதாரணமாக அவள் ரூமில் இருந்து வெளியே வந்து என்னை கண்டவுடன் அதிரிச்சியுடன் என்னை பார்த்து புன்னகைத்தாள், அவள் கைபேசியில் ஊரில் உள்ள அவளது பெற்றோருடன் பேசி கொண்டு இருந்ததால், கண்ணால் மட்டும் சற்று காத்திருக்க சொன்னது எனக்கு புரிந்தது. முதல் முறை ஒரு பெண்கள் தங்கி இருக்கும் வீட்டிற்குள் நுழைந்த தருணம் நான் சற்று பதட்டமாக இருந்ததை  என் தோழி சுதா கவனித்து என்னிடம் சற்று பேச்சு கொடுத்து என் தயக்கத்தை சற்று போக்கினால். பின்பு நான்சி என்னிடம் பேசினால், சுதாவும் நான்சியும் என்னை வைத்து அவர்கள் கிண்டலும் கேலியும் செய்து என்னிடம் விளையாடி கொண்டு இருந்தார்கள். 

          வழக்கமாக இரு பெண்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டால் அவர்களை சமாளிக்க முடியாது என்பது இவ்வுலகில் மாற்ற முடியாது அனைவரும் அறிந்ததே. என் மனதில் அவ்விடத்தைவிட்டு தாமதிக்காமல் தப்பிக்கும் பொறுத்து அவர்களிடம் இருந்து விடை பெற்று கிளம்பினேன். அதன் பின்னர் நான் நான்சியை கல்லூரியில் இருந்து அவளுடன் திருவான்மியூரில் அவள் தெரு வரை அவளிடம் பேசி, அவளை பத்திரமாக அவள் வீடு வரை அனுப்பி வைத்து விட்டு எனது வீட்டிற்கு செல்வது  வழக்கமானது. நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் நான்சியுடன் மாயாஜால், பெசன்ட் நகர் கடற்கரை என்று சுற்றி திரிந்து கொண்டு இருந்தேன். சுதாவும் அவ்வப்போது எங்களுடன் வருவதுண்டு. 

உள்ளுறும் உணர்வுகள்Donde viven las historias. Descúbrelo ahora