வழக்கம் போல் எனது நண்பர்களிடம் பேசி கொண்டிருந்தேன். எனது நண்பன் கணேஷ் நான்சி உடன் சகஜமாக பேசுபவன், அவன் தன் தோழி நான்சியை பற்றி என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு சற்று மொழி பிரச்சனை. அவனுக்கு சரளமாக ஆங்கிலம் பேச இயலாது. எனவே என்னை நான்சி குறுஞ்செய்திக்கு(SMS) பதில் அனுப்ப என்னை அணுகினான். நான்சி நன்றாக சரளமாக ஆங்கிலம் பேசுபவள்.
அவள் அனுப்பிய SMS க்கு என்னுடன் கேட்டு அதற்கு பதில் அனுப்ப என்னை அணுகினான். இப்படி பல நாட்கள் அவனுக்கு பதில் சொல்லி அவளை impress செய்ய நான் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பதில் அனுப்பினேன். ஒரு நாள் அவன் எனக்கு அவளுடைய மொபைல் எண் கொடுத்து என்னையும் பேச செய்தான். அனால் அவளுடன் பேச தயங்கினேன். நான் நன்சியின் மொபைல் நம்பர் மட்டும் எனது போனில் ஏற்றி கொண்டேன். ஒரு நாள் எனது நண்பன் அருண் அவனுடைய தோழி மெர்சிக்கு செமஸ்டர் பீஸ் கட்ட சென்றான், அப்பொழுது நானும் எனக்கு என்று பீஸ் கட்ட சென்றேன். அருண் என்னை நான்சி க்கு பீஸ் கட்ட வேண்டுமா என்று என்னை அவளை கேட்க சொன்னான்.
நான் சற்று தயங்கியபடி என்ன என்று, மறுபடியும் எனது நண்பன் அருணை கேட்டேன். அவன் அவனுடைய தோழி மெர்சி உடன் தொலைபேசியில் பேசி கொண்டிருந்தன். என்னை நான்சியை தொலைபேசியில் அழைத்து என்னை அவளுக்கு செமஸ்டர் பீஸ் கட்ட வேண்டுமா என்று கேட்டு சொல்ல சொன்னான். அப்போது எனக்கு தூக்கி வாரி போட்டது, என்ன இவன் சாதாரணமாக ஒரு பெண் இடம் பேச சொல்கிறான் என்று, நானும் மனதில் தைரியம் வந்து முதன் முதலில் ஒரு பெணிடம் பேச அவளுடைய தொலைபேசிக்கு அழைத்தேன்.. அவளுக்கு ரிங் போனது, என் மனதில் பயம் தொற்றிகொண்டது, சிறிது நேரத்துக்கு அப்பால் அவள் பேச தொடங்கினால், யார் என்றும் வினவினால், நான் என்னை அறிமுகம் செய்து கொண்டு செமஸ்டர் பீஸ் கட்டுவது தொடர்பாக அவளிடம் பேசினேன், சரி அதற்க்கு நான்சி, அருணை தனக்கும் தன் தோழி மெர்சிகும் செமஸ்டர் பீஸ் கட்ட சொன்னால். வெறும் 2 நிமிடம் மட்டுமே அவளின் குரலை கேட்க முடிந்தது.
நான் அவள் குரலை கேட்டது முதல், அவளிடம் சற்று என் நிதானத்தை இழந்தேன், சுதாரித்து அருணிடம் நான்சிக்கும் செமஸ்டர் பீஸ் கட்ட அவள் சொன்னதை சொன்னேன். அவள் ஜனவரி 19 அன்று அவள் ரயில் மூலம் சென்னை வருவதாகவும், அப்போது அவள் பேசுவதாக சொல்லி எனது கால் யை கட் செய்தால். அன்று ஜனோரி 19 அன்று அவளுக்கு நான் செமஸ்டர் பீஸ் கட்டிய செய்தியை தெரிவித்தேன், அதருக்கு அவள் சரி என்று பதில் அனுப்பினால், அன்றைய காலம் வெறும் sms மூலம் பரிமாற்றம் நடந்த காலம்.
அவள் அவளுடைய ஊரில் இருந்து சென்னைக்கு புறபட்டால், அன்று இரவு எனக்கு அவளின் sms கிடைக்க பெற்றேன். அவள் தெற்கு பகுதியை சார்ந்தவள், அவள் ரயிலில் பயணம் செய்தால். அன்று இரவு அவளின் SMS என்னை வேறு ஒரு உலகிருக்கு அழைத்து சென்றது. இரவு 11.30 மணி அளவில் அவள் சிறிது உரையாடலுக்கு பின் தனக்கு ஜனவரி 20 அன்று பிறந்தநாள் என்று என்னிடம் கூறினால்.
அவள் 11.30 மணி அளவில் தனக்கு பிறந்தநாள் என்று சொல்லிய பின் என்னை விட்டு காணமல் போனால். அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல பல பேர் அவளுக்கு call செய்து கொண்டிருந்தனர், என்னை அவளின் பார்வையிலிருந்து சற்று விலக செய்ததது , அவள் விட்டு சென்ற சிறிது நேரம் எனது அலைபேசியில் அவளின் பதிலுக்கு காத்து இருந்தது நான் அவளிடம் பல ஜென்மங்கள் பேசிய அனுபவத்தை என்னால் உணர முடிந்தது. அவளின் பிறந்த தினம் ஜனவரி அன்று எங்களின் சிறு நட்பை உணர முடிந்தது.
அவளின் பிறந்த நாளில் என் நட்பை அவளுக்கு பரிசாக்க எண்ணி அவளை வாழ்த்தி அவளின் சென்னை வருகைக்காக காத்து இருந்த சில மணி துளிகள் என்னை பல யுகங்கள் காத்திருந்த வலியை என் உள்ளுணர்வுகளில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி சென்றது. சிறிது நேரத்திருக்கு பின் அவளின் SMS கிடைக்க பெற்றேன், என்னை பிறந்தநாள் விழாவில் அவளின் நண்பன் கணேஷ் உடன் என்னையும் அழைத்து இன்பத்தில் ஆழ்த்தி சென்றால். அவளை முதன் முதலில் காண செல்லும் சந்தோசத்தை எனது அடுத்த கதையில் தொடர விரும்பிகிறேன். சற்று பொறுமையுடன் காத்து இருக்கவும்..
ВИ ЧИТАЄТЕ
உள்ளுறும் உணர்வுகள்
Романтикаகாதல் என்பது கண்களில் தொடங்கி இதயத்தில் முடியும் என்பதை உணர்ந்திய கற்பனை கலந்த கதை.... நான் காதல் என்னும் சொல்லுக்கும் உணர்வுக்கும் புது விதமான பரிமாணங்களை எனது பார்வையில் இருந்து உணர்த்தும் விதமாக நான் என்னை சுற்றி நடந்த சிலவற்றை கதை வடிவமாக ஒரு உ...