7 - தல ரசிகன்

472 13 4
                                    


                    எனது தோழி நான்சி தனிமையில் அழைத்து செல்லலாம் என்று முடிவு செய்து விட்டு அன்று இரவு அவளிடம் குறுந்தகவல் அனுப்பினேன், அதற்கு அவளிடம் பதில் இல்லை, அவள் வேலையாக இருப்பாள் என்று எண்ணி அவளை எங்கு கூப்பிட்டு செல்வது என்று சற்று நான் யோசனையில் இருந்தேன். அவளிடம் பேசிய பின்பு அவள் சற்று படித்த குடும்பம் என்றும் நினைத்து அவளிடம் கொஞ்சம் நல்ல முறையில் பழகி மேலும் எங்களது நட்பிற்கு எந்த ஒரு பங்கம் வராமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று மனதில் பல குழப்பங்களில் எனது வீட்டில் எனது கணினி முன் அமர்ந்து இணையதளத்தில் சென்னையில் உள்ள பிரபல சுற்றுலா தளங்கள் தேடி கொண்டு இருந்தேன். 

                சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்தது குறுந்தகவல் கிடைக்க பெற்றேன். அவள் என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என்று வினவினாள். நான் உன்னை தனிமையில் அழைத்து செல்ல சென்னையில் உள்ள இடங்களை இணையத்தில் பார்த்து கொண்டு இருப்பதாக சொன்னேன். அவள் அதற்கு சாதாரணமாக வேறு எங்கும் வேணாம் என்றும் கல்லூரியில் சந்திப்போம் என்றும் கூறினால். பின்பு நான் மிகவும் சமாதான படுத்தி அவளை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று கெஞ்சி அவளிடம் சம்மதம் வாங்கினேன். அவளிடமே கேட்டேன் சென்னையில் எங்கு செல்வது என்று அதற்கு அவள் நீயே  முடிவு பண்ணி சொல்லு என்று சொல்லி விட்டு சென்று விட்டால். நான் வெகு நேரம் யோசித்த பின்னர் நான் நாளை படத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து அவளிடம் சொன்னேன். அவளிடம் சம்மதம் வாங்கிய பின்னர் நான் டிக்கெட் புக் செய்தேன்.

             அப்பொழுது தல நடித்த அசல் படத்திற்கு சென்றோம். முதல் முறை என் தோழியுடன் அருகில் அமர்ந்து படம் பார்க்கும் சந்தோசத்தில் மனதில் பயமும் இருந்தது. எனது தோழியை முதன் முதலில் வெளியே தனியாய் அழைத்து வந்ததால் அவளை எப்படி எந்த ஒரு குறையும் சங்கடமும் இல்லாமல் அவளை அனுப்ப வேண்டும் என்றும் எனது மனதில் வேறு ஒரு படம் ஓடிக்கொண்டு இருந்தது. திரையில் படத்தை ரசித்த வண்ணம் என்னை கண்டுகொள்ளாத என்னிடம் பேசாமல் படம் பார்த்து கொண்டு இருந்த தோழி மீது சற்று கோபம், சுமார் அரை மணி நேரம் கழித்து அவளிடம் பேச வேண்டும் என்று அவளின் அருகில் சென்று அவளை அழைத்தேன். 

           அவளை பார்த்த அந்த தருணம் என் இதய துடிப்பு அதிகம் ஆனது. திரையில் உள்ள வெளிச்சத்தில் அவளின் முகம் பார்த்த அந்த ஒரு நொடி என்ன தாய் மொழி தமிழை மறக்க செய்து ஒரு நிமிட மௌனம் என்னை சூழ்ந்து, அருவியாக எனது குருதி என் உடலில் பாய்ந்து செல்வத்தையும், இனம் புரியா மகிழ்ச்சியும் தந்தது. அவளிடம் ஒன்றும் இல்லை என்று சொல்லி விட்டு நானும் படம் பார்ப்பது போன்று நடித்தேன். நான் அதன் பிறகு அவளை திரும்பி பார்க்கவே இல்லை. இடைவேளையில் பின்பு அவள் என் மௌனத்தை கண்டுகொண்டு என்னிடம் பேச என்னை அழைத்தால் திரையரங்கத்தில் உள்ள AC குளிரில் அவள் என்னிடம் பேசும் போது அவளின் சுவாசம் எனது இடது கன்னத்தில் இதமாக உரசி சென்றது . அந்த நொடியில் நான் எனது தாயின் அரவணைப்பில் இருந்த சிறு வயது ஞாபகத்தினுள் என்னை அழைத்து சென்றது. படம் முடிந்து அவளை அனுப்பி வைத்து விட்டு நான் என்ன நடந்தது என்று தெரியாமல் யோசிப்பதற்குள் எனது வீட்டை வந்தடைந்தேன். அந்த நிகழ்வுக்கு பிறகு தான் தல "அஜித் குமார் " எனக்கு பிடிக்க ஆரமித்தது . இன்று தீவிர தல ரசிகனை மாற்றிய அந்த நிகழ்வு இன்றும் ஒரு மறக்க முடியாமல் என் தோழிக்கு கூட தெரியாமல் அதை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன்.

              நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பகுதியை எழுதியதிருக்கு முதலில் வாசகர்கள் மன்னிக்கவும். எனது வேலையின் காரணமாக என்னால் தொடர முடிய வில்லை. உங்களை உற்சாகபடுத்தும் விதமாக இனி விரைவாக பல பகுதியை update செய்கிறேன்.

              ரொம்ப buildup இருக்கும். யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இதை எழுதும் பொழுது சற்று அந்த மலரும் ஞாபகங்கள் நினைத்து அந்த நொடியில் உணர்ந்ததை என்னால் முடிந்த அளவிற்கு நினைத்து எழுதினேன். பிழை இருந்தால் வழக்கம் போல் மன்னிப்பு கேட்டு கொள்கின்றேன். விரைவில் அடுத்த பகுதி தொடரும்....

உள்ளுறும் உணர்வுகள்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin