15 - அறிவற்ற மோகம்

169 8 3
                                    

நான்சியின் வாழ்வில் பல துயரங்களை சந்தித்தால். அவளுக்கு என்று எதுவும் சரியாக அமையவில்லை. அவளுக்கு நல்ல நண்பனாக எப்பொழுதும் அவளுடன் நான் பேசிக்கொண்டு இருந்தேன். அவளுடன் எனது நட்பின் நெருக்கம் அதிகமானது. தினமும் அவளின் ஞாபகம் என்னுள் எப்பொழுதும் நீங்காமல் இருந்து கொண்டு வந்தது. அவளுடன் தினமும் பேசி கொண்டு இருந்தேன். அவளிடம் ஒரு நாள் பேசவில்லை என்றாலும் அது மிகவும் கொடுமையாய் உணருவேன்.

இரண்டு வருடம் காலம் கடந்து கொண்டு போனது. நான் திருச்சியில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். நான் சென்னைக்கு மீண்டும் செல்வதற்கு நான்சி என்னுடன் சென்னையில் விட்டு சென்ற ஞாபகங்களும் ஒருவித காரணம் என்றும் கூறலாம். அவள் என்னுடன் சென்னையில் கல்லூரி படிக்கின்ற பொழுது, நாங்கள் இருவரும் பழகின அந்த பொன்னான தருணங்கள், என் வாழ்க்கையை மாற்றின.

நான் சென்னை சென்ற பின்னர் நான்சியிடம் நாங்கள் பழகின பல நாட்களின் மறுப்பதிப்பை அவளுக்கு உணர்த்தி கொண்டு இருந்தேன். எனக்கு சிறிது நேரம் கிடைக்கும் பொழுது நாங்கள் சென்ற இடங்களுக்கு அவ்வப்போது சென்று அவளின் நினைவுகளில் தத்தளித்தேன்.

நான் சென்னையில் வேலையில் கவனம் செலுத்துவதை விட நான்சியின் குறுந்தகவலுக்கும், அவளின் அழைப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினேன். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் நாங்கள் பேசிக்கொள்வோம். அவள் என்னுடன்,  அவள் பள்ளி பருவம் முதல் தற்பொழுது என்ன நடைபெறுகிறது என்பது வரை என்னுடன் கூறி விடுவாள்.

அவளுக்கு  மிகவும் தன்னம்பிக்கை அதிகம், நான் வேலையில் இருக்கும் அழுத்தம் பற்றி அவளிடம் தெரிவிக்கும் பொழுதும் மற்றும் எனக்கு  கவலை, வருத்தம் வரும் பொழுது அவள் எனக்கு பல ஆலோசனை வழங்குவாள். அவள் எப்பொழுதும் என்னிடம் எதையும் பற்றி வறுத்த படாமல் இருக்குமாறும், வருத்தப்பட்டால் எதுவம் மாறிவிடாது என்றும் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கும் படி என்னிடம் பல முறை அறிவுறுத்துவாள். மேலும் அவளிடம் பேசும்பொழுது அவள் சிரித்துக்கொண்டு பேசுவாள். அவள் எந்த சூழ்நிலையில் தனது சிரிப்பை விட்டு கொடுக்காமல் அப்படியே அதை தொடருவாள்.

உள்ளுறும் உணர்வுகள்Место, где живут истории. Откройте их для себя