நான்சி சென்னைக்கு வருவதை அறிந்தும், அவளை காலையில் ரயில் நிலையத்தில் நான் அழைத்து வருவதாக கூறி அன்று இரவு அவளிடம் பேசி கொண்டு இருந்தேன். அவளை காண போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் அன்று இரவு மிகவும் நீண்டது. மறுநாள் காலை நான் விரைவாக அவளை காண சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ஆவடியில் இருந்து முதல் ரயிலை பிடித்து புறப்பட்டேன். அவளின் ரயில் சுமார் 7.30 மணி அளவில் வரும் என்று அவள் கூறினாலும், அவளை காண வேண்டும் என்கிற ஆர்வம் மிகுதியால் நான் காலை 5 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு காலை 6.30 மணி அளவில் சென்றேன்.
அங்கு சென்றவுடன் அவளின் ரயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக வருவதாக தகவல் கிடைக்கப்பெற்றேன். அவளை காண போகிறோம் என்கிற சந்தோஷத்தில் அவள் வரும் ரயிலின் திசையை நோக்கி ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை அவளின் ரயில், ரயில்நிலையத்திற்குள் வருகிறதா என்று பார்த்து கொண்டு இருந்தேன். அவளை சுமார் 2 வருட காலத்திற்கு பின்னால் பார்க்க போகிறேன் என்கிற எல்லையில்லா ஆர்வம் அவளின் அன்பும் என்னை சற்று வேறு ஒரு உலகத்திற்குள் அழைத்து சென்றது. சுமார் 8 மணி அளவில் அவளின் ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்குள் ரீங்காரத்துடன் என்னை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அவளை காண அவளின் இருக்கை அமைத்திருக்கும் பகுதி அருகில் சென்றேன். அவளை 2 வருடத்திற்கு பிறகு கண்டவுடன், என் மனதில் அடைந்த சந்தோசத்திற்கு அளவு இல்லாமல் போனது. அன்றைய பொழுது சென்னையில் சிறிய மழை சாரல். காலையில் சிறு குளிருடன் இருக்கும் தருவாயில் அவள் என் அருகில் இருக்கும் பொழுது நான் புதிதாய் உணரப்பெற்றேன்.
அவளை இரண்டு நாட்கள் சந்தோசமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் அவளை சென்னையில் எழும்பூர் முதல் ஆவடி வரை அவளிடம் 2 வருடம் கதைகளை பேசிக்கொண்டு வந்தேன். பின்பு அவளை ஆவடியில் இருந்து அவளது தோழி வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும் அவளை என்னுடன் இரு சக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டியது இருக்கும் என்று அவளிடம் அனுமதி கேட்டேன். அவள் புன் முறுவலுடன் சரி என்று அனுமதி கொடுத்தால்.
ESTÁS LEYENDO
உள்ளுறும் உணர்வுகள்
Romanceகாதல் என்பது கண்களில் தொடங்கி இதயத்தில் முடியும் என்பதை உணர்ந்திய கற்பனை கலந்த கதை.... நான் காதல் என்னும் சொல்லுக்கும் உணர்வுக்கும் புது விதமான பரிமாணங்களை எனது பார்வையில் இருந்து உணர்த்தும் விதமாக நான் என்னை சுற்றி நடந்த சிலவற்றை கதை வடிவமாக ஒரு உ...